Advertisement

மொத்த விலை பணவீக்கம் வீழ்ச்சி

புதுடில்லி : பருப்பு, காய்­க­றி­கள், உள் ளிட்ட உண­வுப் பொருட்­கள் விலை குறை­வால், நாட்­டின் மொத்த விலை பண­வீக்­கம், மார்ச்­சில், 2.47 சத­வீ­த­மா­கக் குறைந்­துள்­ளது. இது, பிப்­ர­வ­ரி­யில், 2.48 சத­வீ­த­மாக இருந்­தது.

கடந்த ஆண்டு மார்ச்­சில், மொத்த விலை பண­வீக்­கம், 5.11 சத­வீ­த­மாக உயர்ந்து இருந்­தது.முந்­தைய எட்டு மாதங்­களில் இல்­லாத அள­விற்கு, மொத்த விலை பண­வீக்­கம் குறைந்­துள்­ளது. இதற்கு முன், 2017, ஜூலை­யில், பண­வீக்­கம், 1.88 சத­வீ­தம் என்ற அள­வில், மிகக் குறை­வாக இருந்­தது.

மார்ச்­சில், உண­வுப் பொருட்­கள், 0.29 சத­வீ­தம் என்ற அள­வில் பண­வாட்­டம் கண்­டுள்­ளன. இது, பிப்­ர­வ­ரி­யில், 0.88 சத­வீத பண­வீக்­க­மாக இருந்­தது.அது­போல, காய்­க­றி­கள், 2.70 சத­வீ­தம்; பருப்பு வகை­கள், 20.58 சத­வீ­தம் மற்­றும் கோதுமை, 1.19 சத­வீ­தம் என்ற அள­வில், பண­வாட்­டம் கண்­டு உள்­ளன. அதே­ச­ம­யம், எரி­பொ­ருள் மற்­றும் மின்­சார பண­வீக்­கம், 4.70 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது. இது, பிப்­ர­வ­ரி­யில், 3.81 சத­வீ­த­மாக இருந்­தது.

மார்ச்­சில், சில்­லரை பண­வீக்­கம், ஐந்து மாதங்­களில் இல்­லாத அள­விற்கு, 4.28 சத­வீ­த­மாக குறைந்­துள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement