Advertisement

ரோஜா விலை வீழ்ச்சி

சென்னை : வரத்து அதி­க­ரிப்பு கார­ண­மாக, மலர் சந்­தை­யில் ரோஜா விலை அதி­ர­டி­யாக சரிந்­து உள்­ளது.சென்னை பூக்­கடை மலர் விற்­பனை அங்­கா­டி­களில், ரோஜா, மல்லி விலை குறைந்­து உள்­ளது. திரு­வள்­ளூர் சுற்­று­வட்­டார பகு­தி­கள் மற்­றும் ஆந்­தி­ரா­வில் இருந்து வரத்து அதி­க­ரித்­துள்­ள­தால், ரோஜா கிலோ, 20 ரூபாய்க்கு விற்­ப­னை­ ஆனது. மல்லி ஒரு சேர், 20 – 40 ரூபாய்க்கு விற்­ப­னை­யா­னது. சாமந்தி வரத்து குறைந்­துள்­ளது. குறைந்­த­ளவே விற்­ப­னைக்கு வரும் சிறிய ரக சாமந்தி, 1 கிலோ, 120 ரூபா­யாக உள்­ளது. தாமரை வரத்து அதி­க­ரித்­துள்­ள­தால், ஒரு மல­ரின் விலை, 3 ரூபாய்க்கு குறைந்­துள்­ளது. செண்­ப­கப்பூ ஒன்று, ஒரு ரூபாய்க்கு விற்­ப­னை­யா­னது. கன­காம்­ப­ரம், 50 கிராம், 30 – 40 ரூபாய்க்கு விற்­ப­னை­யா­னது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement