Advertisement

இல்லத்திற்கே அழைக்கிறார் அனிருத்

இளம் இசையமைப்பாளர் அனிருத், ஏசியன் பெயின்ட் சார்பில் இதயம் எங்கே என்ற வெப் சீரியசின் 2 சீசனுக்காக வாழ்த்து தெரிவித்து இல்லத்திற்கே அழைக்கிறார்.

''எசியன் பெயின்டின் இதயம்'' எங்கே என்ற வெப்சீரிசின் 2-வது சீசன் வெளியாக உள்ளது. இந்த வெப்சீரிஸ் மூலம், பார்வையாளர்கள் பிரபலங்களின் வீடுகளை பார்க்க வாய்ப்பு கிடைக்கும்.

இதில் பிரபலங்களின் மனதில் அழியா நினைவுகளுடன் இருக்கும், சுவர்கள், வீட்டு உபயோக பொருட்களை பார்வையாளர்கள் தெரிந்து கொள்ள முடியும்.இந்த வெப்சீரிசின் 5வது எபிசோடில், கொலை வெறி பாடல் மூலம் புகழ்பெற்ற இளம் இசையமைப்பாளர் அனிருத் தனது வாழ்க்கை பயணத்தின் ஒரு பகுதியை நேயர்களுக்கு விளக்கிட உங்களை தனது வீட்டிற்கே அழைக்கிறார்.

அவரது வீடு, சென்னை பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் நவீன மற்றும் பாரம்பரிய முறைப்படி கட்டப்பட்டுள்ளது. இங்கு செல்லும் ரசிகர்கள், அனிருத் குடும்பத்தின் மதிப்பு மற்றும் பெருமைகளையும், அவரது இளமை பருவம் துவங்கி குடும்பம் பற்றிய விஷயங்களையும் தெரிந்து கொள்ள முடியும்.

மேலும் விபரங்களை,
https://www.youtube.com/watch?v=_ldZjA8cIBY என்ற இணைய தள லிங்க வாயிலாக தெரிந்துகொள்ளலாம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement