Advertisement

மூலதன ஆதாய வரியால் ஓய்வூதிய முதலீடு பாதிக்காது

புதுடில்லி:‘‘வரும் நிதி­யாண்­டில் அம­லாக உள்ள, நீண்ட கால மூல­தன ஆதாய வரி­யால், தேசிய ஓய்­வூ­திய திட்­டத்­தின் கீழ் மேற்­கொள்­ளும் முத­லீ­டு­க­ளுக்கு பாதிப்பு ஏற்­ப­டாது,’’ என, ஓய்­வூ­திய நிதி­யம் ஒழுங்­கு­முறை மற்­றும் மேம்­பாட்டு ஆணை­யத்­தின் தலை­வர், ஹேமந்த் காண்ட்­ராக்­டர் தெரி­வித்து உள்­ளார்.

அவர் கூறி­ய­தா­வது:மத்­திய பட்­ஜெட்­டில், ‘மீண்­டும் நீண்ட கால மூல­தன ஆதாய வரி அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும்’ என, தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது. அத­னால், ஏப்., முதல், பங்கு முத­லீட்­டில், 1 லட்­சம் ரூபாய்க்கு மேற்­பட்ட லாபத்­திற்கு, 10 சத­வீ­தம் மூல­தன ஆதாய வரி செலுத்த வேண்­டும்.

இதன் கார­ண­மாக, தேசிய ஓய்­வூ­திய திட்­டத்­தின், பங்கு முத­லீட்டு வரு­வா­யில் பாதிப்பு ஏதும் இருக்­காது. ஏனெ­னில், இந்த முத­லீ­டு­கள், வரி விலக்கு சலுகை பெற்ற, தேசிய ஓய்­வூதிய திட்ட அறக்­கட்­டளை மூலம் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்றன.

அதே சம­யம், வரி விலக்கு சலுகை இல்­லாத, ஓய்­வூ­தி­யம் சாரா கணக்­கின் கீழ் கிடைக்­கும், பங்கு முத­லீட்டு வரு­வா­யில் சிறி­த­ளவு தாக்­கம் ஏற்­ப­ட­லாம். இப்­பி­ரி­வில் மேற்­கொள்­ளும் முத­லீ­டு­கள் குறை­வா­னவை என்­ப­தால், தாக்­க­மும் குறை­வா­கவே இருக்­கும்.

தேசிய ஓய்­வூ­திய திட்­டத்­தின் கீழ், 2 கோடி சந்­தா­தா­ரர்­களின், 2.25 கோடி ரூபாய் நிர்­வ­கிக்­கப்­ப­டு­கிறது.இவ்­வாறு அவர் கூறி­னார்.

இலக்கு எட்டப்படும்

‘அடல் பென்­ஷன் யோஜனா’ திட்­டத்­தில், மார்ச்­சுக்­குள், 1 கோடி சந்­தா­தா­ரர்­களை சேர்க்க இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்டு உள்­ளது. தற்­போது, 88 லட்­சம் பேர் இணைந்து உள்­ள­னர். இத்­திட்­டத்­தின் கீழ், 4,000 கோடி ரூபாய் நிர்­வ­கிக்­கப்­ப­டு­கிறது. வரும் நிதி­யாண்­டில், இத்­திட்­டத்­தில் மேலும், 50 லட்­சம் சந்­தா­தாரர்­களை சேர்ப்­போம் என்ற நம்­பிக்கை உள்­ளது.

ஹேமந்த் காண்ட்ராக்டர்

தலைவர், ஓய்வூதிய நிதியம் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement