Advertisement

இறக்குமதிக்கு அதிக வரி இந்தியா மீது டிரம்ப் காட்டம்

வாஷிங்டன்:அமெ­ரிக்­கா­வின், ஹார்லி டேவிட்­சன் மோட்­டார் சைக்­கி­ளுக்கு, இந்­தியா அதிக வரி விதித்­துள்­ள­தாக, அமெ­ரிக்க அதி­பர், டொனால்டு டிரம்ப் தெரி­வித்­துள்­ளார்.
அவர், உருக்கு துறை குறித்து, எம்.பி.,க்கள் கூட்­டத்­தில் பேசி­ய­தா­வது:

அமெ­ரிக்­கா­வின் ஹார்லி டேவிட்­சன் உள்­ளிட்ட மோட்­டார் சைக்­கிள்­க­ளுக்கு, இந்­தி­யா­வில் இறக்­கு­மதி வரி, 75 சத­வீ­தத்­தில் இருந்து, 50 சத­வீ­த­மாக குறைக்­கப்­பட்­டுள்­ளது.
இது போதாது. முழு­வ­து­மாக வரியை நீக்க வேண்­டும். இந்­தி­யா­வில் இருந்து இறக்­கு­ம­தி­யா­கும் மோட்­டார் சைக்­கிள்­க­ளுக்கு, அமெ­ரிக்கா வரி ஏதும் விதிப்­ப­தில்லை. அத­னால், இந்­தியா சுங்க வரியை நீக்க வேண்­டும்.

நாம் உற்­பத்தி செய்­யும் பொருட்­களை, வெளி­நா­டு­களில் விற்க, அதிக அள­வில் வரி செலுத்­து­கி­றோம். ஆனால், வெளி­நா­டு­கள், ஆயி­ரக்­க­ணக்­கான மோட்­டார் சைக்­கிள்­களை, வரி­யின்றி, அமெ­ரிக்­கா­விற்கு ஏற்­று­மதி செய்து, வரு­வாய் பார்க்­கின்றன.இந்த போக்கு மாற வேண்­டும். நான், இந்­தி­யாவை குறை சொல்­ல­வில்லை. ஆனால், இரு நாடு­களின் வரி விதிப்­பில், பரஸ்­ப­ரம் ஒத்த நடை­மு­றையை பின்­பற்ற வேண்­டும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement