Advertisement

பிளாக் செயின் தொழில்நுட்பத்தால் கணக்காளர்கள் பணி வாய்ப்பு குறையும்

புதுடில்லி:ஜி.எஸ்.டி., தாக்­கம் குறித்து, சர்­வ­தேச கணக்­கா­ளர் கூட்­ட­மைப்­பான, ஐ.எப்.ஏ.சி., சார்­பில், ஹாரிஸ் போல் நிறு­வ­னம், வலை­த­ளத்­தில் கருத்து கணிப்பு நடத்­தி­யது.

இதில் பங்­கேற்ற, 1,200 பேரில், 64 சத­வீ­தம் பேர், ஜி.எஸ்.டி.,யால் வர்த்­தக சூழல் பாதிக்­கப்­பட்டு உள்­ள­தாக தெரி­வித்து உள்­ள­னர். வணி­கத்­தில், ஜி.எஸ்.டி.,யை கணக்­கிட, அனு­ப­வ­முள்ள கணக்­கா­ளர்­கள் தேவை என, 74 சத­வீ­தம் பேர் கரு­து­கின்­ற­னர்.

சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள், மறை­முக வரி­கள் என்ற தொல்­லை­யில் இருந்து விடு­பட்­டுள்ளன. ஜி.எஸ்.டி.,யால், அவற்­றின் வரி நடை­மு­றை­களில், அதிக வெளிப்­ப­டைத் தன்மை ஏற்­பட்­டுள்­ளது. உற்­பத்தி செலவு, வர்த்­தக விரி­வாக்­கம் உள்­ளிட்ட செயல்­பா­டு­களை திட்­ட­மிட, ஜி.எஸ்.டி., துணை புரி­கிறது.

சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள், நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு துாணாக விளங்­கு­கின்றன. இந்­நி­று­வ­னங்­கள், 2020ல், ஜி.டி.பி.,யில், 50 சத­வீத பங்­க­ளிப்பை வழங்­கும் என, எதிர்­பார்க்­கப்­
ப­டு­கிறது.அடுத்த, 10 ஆண்­டு­களில், செயற்கை நுண்­ண­றிவு, பிளாக் செயின் போன்ற தொழில்­நுட்­பங்­க­ளால், கணக்­கா­ளர்­கள் பிரி­வில் பணி வாய்ப்பு குறை­யும்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement