Advertisement

வரி சேமிப்பு வைப்பு நிதிகள்

வரி சலுகை பெற உதவும் முத­லீட்டு வாய்ப்­பு­களில் ஒன்­றாக திகழும் வரி சேமிப்பு வைப்பு நிதி திட்­டங்கள் குறித்து அறிய வேண்­டிய முக்­கிய அம்­சங்கள்:டேக்ஸ் சேவிங் பிக்சட் டிபாசிட் என குறிப்­பி­டப்­படும் வரி சேமிப்பு வைப்பு நிதி திட்­டங்­களில் தனி­ந­பர்கள் மற்றும் ஹிந்து கூட்டு குடும்­பங்கள் (எச்.யூ.எப்.,) மட்­டுமே முத­லீடு செய்­யலாம். இதற்­கான குறைந்­த­பட்ச தொகை வங்­கி­க­ளுக்கு இடையே மாறு­படலாம்.
இந்த வைப்பு நிதிகள் ஐந்து ஆண்டு லாக் இன் காலம் கொண்­டவை. அதற்கு முன் விலக்கி கொள்­ளவோ, இவற்­றுக்கு எதி­ராக கடன் பெறவோ முடி­யாது. பொதுத்­துறை அல்­லது தனியார் வங்­கிகள் மூலம் இதில் முத­லீடு செயலாம். கூட்­டு­றவு வங்­கிகள், கிரா­மப்­புற வங்­கிகள் மூலம் முத­லீடு செய்ய முடி­யாது.
அஞ்சல் அலு­வ­ல­கங்­களில் செய்­யப்­படும் ஐந்து ஆண்டு டைம் டிபாசிட் திட்­டங்களுக்கும், வரு­மான வரி சட்டம், 80 சி பிரிவின் கீழ் வரிச்­ச­லுகை கோரலாம். அஞ்­ச­லக வைப்பு நிதியை ஒரு அஞ்சல் அலு­வ­லகத்தில் இருந்து இன்­னொரு அலு­வ­லகத்­திற்கு மாற்­றிக்­கொள்­ளலாம்.வைப்பு நிதியை தனி­யாக அல்­லது கூட்­டாக மேற்­கொள்­ளலாம். கூட்­டாக மேற்­கொள்ளும் போது, கணக்கில் முதல் பெய­ராக உள்­ளவர் மட்­டுமே வரி விலக்கு கோர முடியும். நாமி­னேஷன் வச­தியும் உண்டு.
வட்டி வரு­மா­னத்­திற்கு டி.டீ.எஸ்., வரி பொருந்தும். இதை தவிர்க்க தேவை­யான ஆவ­ணங்­களை வழங்க வேண்டும். பெரும்­பா­லான வங்­கிகள் மூத்த குடி­ம­கன்­களுக்கு அதிக வட்டி வழங்­கு­கின்­றன. இது, வரி சேமிப்பு வைப்பு நிதிக்கும் பொருந்தும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement