Advertisement

ஹீண்டாய்:வெர்னா 1.4 லிட்­டர் பெட்­ரோல்

ஹூண்­டாய் நிறு­வ­னம், அதன் நடுத்­தர ரக, செடான் காரான, ‘வெர்னா’வில், பெட்­ரோல் வேரி­யன்ட்­டில், புதிய காரை அறி­மு­கம் செய்­துள்­ளது. இந்த, ‘1.4 லி., வெர்­ஷ­னில்’ குறைந்த விலை­யு­டைய, ‘இ’ வேரி­யன்ட் காரின், டில்லி ஷோரூம் விலை, 7.80 லட்­சம் ரூபா­யில் இருந்து துவங்­கு­கிறது. அதற்­க­டுத்த வேரி­யன்ட், ‘இ எக்ஸ்’ விலை, 9.10 லட்­சம் ரூபா­யில் இருந்து துவங்­கு­கிறது.
இது­வரை தயா­ரிக்­கப்­பட்ட, 1.6 லி., பெட்­ரோல் வெர்­ஷ­னில் இருந்த, இ மற்­றும் இ எக்ஸ் வேரி­யன்ட்­கள் நிறுத்­தப்­பட்டு உள்ளன. புதிய அறி­மு­க­மான, 1.4 லி., பெட்­ரோல் வெர்­ஷ­னின் விலை, ‘1.6 இ பெட்­ரோல்’ வெர்­ஷ­னின் விலையை விட, 20 ஆயி­ரம் ரூபாய் குறைந்­துள்­ளது. விலை குறை­வ­தால், இந்த புதிய காரின் விற்­பனை சூடு­பி­டிக்­கும் என, ஹூண்­டாய் எதிர்­பார்க்­கிறது. 1.4 லி., பெட்­ரோல் வெர்­ஷன், இன்­ஜின், 100 எச்.பி., திறனை உரு­வாக்­கு­கிறது.
இதில், முந்­தைய வெர்­ஷனை விட, 8 சத­வீ­தம் மைலேஜ் கூடு­த­லாக இருக்­கு­மாம். இந்த, ‘மேனு­வல்’ மாட­லில், ஆறு கியர்­கள் உள்ளன. ‘இ எக்ஸ்’ வேரி­யன்­டில், கூடு­த­லாக, ‘ரிவர்ஸ் பார்­கிங் சென்­சர்ஸ், ஸ்டீ­ரிங்­கில் ஆடியோ கன்ட்­ரோல்’ வசதி, 5.0 அங்­குல தொடு­திரை இன்­போ­டெ­யின்­மென்ட் போன்ற அம்­சங்­கள் உள்ளன.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement