Advertisement

சீனாவில் இருந்து வெளியேறும் அமெரிக்க நிறுவனங்கள் ஆசியாவில் மாற்று முதலீட்டு மையமாக உருவெடுக்க இந்தியாவுக்கு வாய்ப்பு

புதுடில்லி:‘‘சீனா­வில் இருந்து வெளி­யே­றும் அமெ­ரிக்க நிறு­வ­னங்­களை ஈர்த்து, மாற்று முத­லீட்டு மைய­மாக உரு­வெ­டுக்­கும் வாய்ப்பு, இந்­தி­யா­வுக்கு கிடைத்­துள்­ளது,’’ என, அமெ­ரிக்க துாதர், கென்­னத் ஜஸ்­டர் தெரி­வித்து உள்­ளார்.
இவர், இந்­தி­யா­விற்­கான துாதராக பொறுப்­பேற்ற பின், முதன்­மு­றை­யாக ஆற்­றிய உரை:அமெ­ரிக்க அரசு, ‘அமெ­ரிக்­கர்­க­ளுக்கே முன்­னு­ரிமை’ என்ற கொள்­கையை கொண்­டுள்­ளது. அது போல, ‘மேக் இன் இந்­தியா’ என, உள்­நாட்டு தொழில் ஊக்­கு­விப்பு கொள்­கையை, மத்­திய அரசு கடை­பி­டிக்­கிறது. இக்­கொள்­கை­களை இணக்­க­மற்­ற­வை­யாக கரு­த­வி­ய­லாது. பரஸ்­பர முத­லீடு மேற்­கொண்­டால், இரு நாடு­களும் பயன் பெறும்.
நெருக்கடி
அவற்­றின் பொரு­ளா­தா­ரம், வர்த்­த­கம் அதி­க­ரிக்­கும். இது, புதிய தொழில்­நுட்­பங்­களில் கூட்­டி­ணை­வுக்­கும், வேலை­வாய்ப்­பு­கள் உரு­வா­க­வும் துணை புரி­யும்.இந்­தியா – அமெ­ரிக்கா இடையே, பாது­காப்பு துறை­யில் நீடித்து வரும் பரஸ்­பர நல்­லு­றவு, பொரு­ளா­தா­ரத்­தி­லும் விரி­வாக்­கம் காண வேண்­டும். அதற்­கான தரு­ணம், தற்­போது வந்­துள்­ளது.ஆசிய பிராந்­தி­யத்­தில், மிகப்­பெ­ரிய சந்­தையை கொண்­டுள்ள சீனா­வில், அமெ­ரிக்க நிறு­வ­னங்­கள் பல்­வேறு நெருக்­க­டி­களை சந்­திக்­கின்றன.
சில நிறு­வ­னங்­கள், சீனா­வில் வர்த்­தக நட­வ­டிக்­கை­களை குறைத்து, மாற்று சந்­தை­களை தேடத் துவங்கி உள்ளன. இந்த நல்ல வாய்ப்பை, இந்­தியா பயன்­ப­டுத்­திக் கொள்ள வேண்­டும்.வர்த்­த­கம் மற்­றும் முத­லீ­டு­களை ஈர்ப்­ப­தன் மூலம், இந்­திய – பசு­பிக் பிராந்­தி­யத்­தில், அமெ­ரிக்­கா­வின் வர்த்­த­கத்­திற்கு, மாற்று மைய­மாக உரு­வெ­டுக்­கும் வாய்ப்பு, இந்­தி­யா­விற்கு உள்­ளது.பிர­த­மர் மோடி அர­சின் பொரு­ளா­தார சீர்த்­தி­ருத்த செயல்­பா­டு­க­ளால், வலி­மை­யான, வெளிப்­ப­டை­யான, ஒழுங்­கு­ப­டுத்­தப்­பட்ட சந்தை உரு­வாகி உள்­ளது. இத­னால் இந்­தியா, நிலை­யான, நீண்ட கால வளர்ச்­சியை காணும்.
தொட­ரும் சீர்­தி­ருத்­தங்­களும், வணி­கத்தை தாரா­ள­ம­ய­மாக்­கும் நட­வ­டிக்­கை­களும், இந்­திய பொருட்­க­ளுக்கு, சர்­வ­தேச சந்­தை­யில் கூடு­த­லான வர்த்­த­கத்தை வழங்கி, வேலை­வாய்ப்பை அதி­க­ரிக்க துணை நிற்­கும்.
கவலை
அமெ­ரிக்க – இந்­திய சந்­தை­களை பொறுத்­த­வரை, சரக்கு மற்­றும் சேவை துறை­களில், இன்­னும் எண்­ணற்ற பரஸ்­பர வர்த்­தக வாய்ப்­பு­கள் உள்ளன.உலக வங்கி, சுல­ப­மாக தொழில் செய்­யும் நாடு­களின் வரி­சை­யில், இந்­தி­யாவை வெகு­வாக உயர்த்தி உள்­ளது.அது போல, அமெ­ரிக்­கா­வில், வலி­மை­யாக உள்ள, அறி­வு­சார் சொத்­து­ரிமை பாது­காப்பு சூழல், முத­லீ­டு­களை அதி­க­ரிக்­க­வும், புதிய தொழில்­நுட்ப அறிவை, பிற நாடு­க­ளு­டன் பகிர்ந்து கொள்­ள­வும் உத­வு­கிறது.எனி­னும், அமெ­ரிக்கா உட­னான, இந்­தி­யா­வின் வர்த்­தக பற்­றாக்­குறை கவலை அளிக்­கிறது. வர்த்­த­கம் மற்­றும் முத­லீடு தொடர்­பான பிரச்­னை­க­ளுக்கு, இந்­தியா உடன் இணைந்து தீர்வு காண, அமெ­ரிக்கா தயா­ராக உள்­ளது.இவ்­வாறு அவர் கூறி­னார்.
பரஸ்பர வர்த்தகம்
இந்­தியா – அமெ­ரிக்கா இடை­யி­லான பரஸ்­பர வர்த்­த­கம், 2001ல், 2,000 கோடி டால­ராக இருந்­தது. இது, 2016ல், 11,500 கோடி டால­ராக உயர்ந்­துள்­ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement