Advertisement

ஜியோ காயின்: ரிலையன்ஸ் அதிரடி

மும்பை:முகேஷ் அம்­பானி தலை­மை­யி­லான, ரிலை­யன்ஸ் ஜியோ நிறு­வ­னம், வலை­த­ளங்­களில் மட்­டும் புழங்­கக்­கூ­டிய, ‘ஜியோ காயின்’ எனப்­படும், மெய்­நி­கர் கரன்­சியை வெளி­யிட திட்­ட­மிட்டு உள்­ளது.
முகேஷ் அம்­பா­னி­யின் மகன், ஆகாஷ் அம்­பா­னி­யின் தலை­மை­யில், ‘ஜியோ காயின்’ திட்­டம் செயல்­ப­டுத்­தப்­பட உள்­ள­தாக, தக­வல் வெளி­யாகி உள்­ளது.இதற்­காக, துடிப்­பான, 50 இளம் வல்­லு­னர்­கள் குழுவை தேர்வு செய்­யும் பணி­யில், ‘ஆர்­ஜியோ’ நிறு­வ­னம் தீவி­ர­மாக ஈடு­பட்­டுள்­ளது.
இது குறித்து, இதன் உய­ர­தி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது:
ஆகாஷ் அம்­பானி, ‘பிளாக் செயின்’ தொழில்­நுட்­பத்­தில் மேற்­கொள்­ளப்­படும் மெய்­நி­கர் கரன்சி பரி­வர்த்­த­னை­யில் கள­மி­றங்க ஆர்­வ­மு­டன் உள்­ளார்.இந்த தொழில்­நுட்­பம் மூலம், தொலை தொடர்பு துறை­யில், ‘ஸ்மார்ட் அழைப்­பு­கள்’ எனப்­படும், மேம்­பட்ட சேவை­கள், தக­வல் பரி­வர்த்­தனை வச­தி­களை, வாடிக்­கை­யா­ளர்­கள் பெற­லாம்.தொலை தொடர்பு சேவை மட்­டு­மின்றி, நிறு­வ­னம் அறி­மு­கப்­ப­டுத்த உள்ள, செயற்கை நுண்­ண­றிவு மற்­றும் சாத­னங்­கள் இடை­யி­லான, இணைய பயன்­பாடு போன்ற புதிய தொழில்­நுட்­பங்­கள் சார்ந்த பொழு­து­போக்கு திட்­டங்­க­ளுக்­கும், ‘ஜியோ காயின்’ மெய்­நி­கர் கரன்­சியை பயன்­ப­டுத்த முடி­யும்.
இதன் மூலம், ரிலை­யன்ஸ் குழு­மத்­தின் மிக முக்­கி­ய­மான அங்­க­மாக, ஆர்­ஜியோ நிறு­வ­னம் உரு­வெ­டுக்­கும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.தொலை தொடர்பு துறை­யில், குறு­கிய காலத்­தில், ஏர்­டெல், வோட­போன் உள்­ளிட்ட முன்­னணி நிறு­வ­னங்­க­ளுக்கு, சிம்ம சொப்­ப­ன­மாக, ஆர்­ஜியோ நிறு­வ­னம் உரு­வெ­டுத்து உள்­ளது.இந்­நி­லை­யில், மெய்­நி­கர் கரன்சி தொழில்­நுட்­பத்­தி­லும் கள­மி­றங்கி கலக்க உள்­ள­தால், இதை சமா­ளிக்க வேண்­டிய நிலை, போட்டி நிறு­வ­னங்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்­ளது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement