Advertisement

தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி 17 மாதங்களில் இல்லாத உயர்வு

புதுடில்லி:நாட்­டின் தொழில் துறை உற்­பத்தி, 17 மாதங்­களில் இல்­லாத வகை­யில், 2017 நவம்­ப­ரில், 8.4 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது. இது, அக்­டோ­ப­ரில், 2.2 சத­வீ­த­மாக இருந்­தது.கடந்த, 2016 ஜூனில், தொழில் துறை உற்­பத்தி, அதி­க­பட்­ச­மாக, 8.9 சத­வீத வளர்ச்­சியை கண்­டி­ருந்­தது.
தொழில் துறை உற்­பத்தி குறி­யீட்டை கணக்­கி­டு­வ­தில், தயா­ரிப்­புத் துறை, பெரும்­பான்மை பங்கை கொண்­டுள்­ளது. 2017 நவம்­ப­ரில், தயா­ரிப்­புத் துறை உற்­பத்தி, 10.2 சத­வீ­த­மாக வளர்ச்சி கண்­டுள்­ளது. இது, அக்­டோ­ப­ரில், 2.5 சத­வீ­தம்; 2016 நவம்­ப­ரில், 4.8 சத­வீ­த­மாக இருந்­தது.
பொறி­யி­யல் சாத­னங்­கள் துறை உற்­பத்தி வளர்ச்சி, 9.8 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது. இது, அக்­டோ­ப­ரில், 6.8 சத­வீ­த­மாக இருந்­தது.இதே காலத்­தில், நுகர்­வோர் சாத­னங்­கள் துறை உற்­பத்தி, மைனஸ், 6.9 சத­வீத பின்­ன­டை­வில் இருந்து, 2.9 சத­வீ­த­மாக வளர்ச்சி கண்­டுள்­ளது. சுரங்­கத் துறை உற்­பத்­தி­யும், 0.2 சத­வீத பின்­ன­டை­வில் இருந்து, 1.1 சத­வீ­தம் ஏற்­றம் கண்­டுள்­ளது. மின் உற்­பத்தி, 3.2 சத­வீ­தத்­தில் இருந்து, 3.9 சத­வீ­த­மாக அதி­க­ரித்­துள்­ளது.கடந்த, 2015 செப்­டம்­ப­ரில், தொழில் துறை உற்­பத்தி, 3.6 சத­வீ­த­மாக இருந்­தது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement