Advertisement

காய்கறிகள், பழங்கள் விலை உயர்வால் நாட்டின் சில்லரை பணவீக்கம் அதிகரிப்பு

புதுடில்லி:காய்­க­றி­கள், பழங்­கள், எரி­பொ­ருள் விலை உயர்­வால், நாட்­டின் சில்­லரை பண­வீக்­கம்,2017 டிசம்­ப­ரில், 5.21 சத­வீ­த­மாக அதி­க­ரித்­துள்­ளது.
இது குறித்து, மத்­திய புள்­ளி­யி­யல் அலு­வ­ல­கம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை:
டிசம்­ப­ரில், சில்­லரை பண­வீக்­கம், 5.21 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது. இது, நவம்­ப­ரில், 4.88 சத­வீ­த­மாக இருந்­தது. 2016 டிசம்­ப­ரில், சில்­லரை பண­வீக்­கம், 3.41 சத­வீ­த­மாக இருந்­தது.உண­வுப் பொருட்­கள் பண­வீக்­கம், 2017 டிசம்­ப­ரில், 4.96 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது. இது, நவம்­ப­ரில், 4.35 சத­வீ­த­மாக இருந்­தது. 2016 டிசம்­ப­ரில், உண­வுப் பொருட்­கள் பண­வீக்­கம், 1.37 சத­வீ­த­மாக இருந்­தது. காய்­க­றி­கள், பழங்­கள், முட்டை, எரி­பொ­ருள் உள்­ளிட்­ட­வற்­றின் விலை உயர்ந்­துள்­ளது. பருப்பு மற்­றும் தானிய வகை­கள் விலை குறைந்­துள்­ளது.
மதிப்­பீட்டு மாதத்­தில், உணவு மற்­றும் பானங்­கள் சில்­லரை பண­வீக்­கம், 4.85 சத­வீ­த­மாக உள்­ளது. ஆடை மற்­றும் காலணி பண­வீக்­கம், 4.80 சத­வீ­தம்; குடி­யி­ருப்பு பண­வீக்­கம், 8.25 சத­வீ­தம்; எரி­பொ­ருள் பண­வீக்­கம், 7.90 சத­வீ­தம் மற்­றும் இதர பொருட்­கள் பண­வீக்­கம், 3.79 சத­வீ­த­மாக உள்­ளது.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.கடந்த, 2016 ஜூலை­யில், சில்­லரை பண­வீக்­கம், 6.07 சத­வீ­தம் என்ற அள­வில் உச்­சத்­தில் இருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement