Advertisement

பொருளாதார, சமூக, நிர்வாக சீர்திருத்தங்களால்... இந்தியா வேகமான வளர்ச்சி காணும் ‘மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சர்வீஸ்’ கணிப்பு

சிங்கப்பூர்:‘மத்­திய அரசு செயல்­ப­டுத்தி வரும், பொரு­ளா­தார, சமூக, நிர்­வாக சீர்­தி­ருத்­தங்­க­ளால், இந்­தி­யா­வின் வளர்ச்சி வேகம் அதி­க­ரிக்­கும்’ என, தர நிர்­ணய நிறு­வ­ன­மான, ‘மூடிஸ் இன்­வெஸ்­டர் சர்­வீஸ்’ தெரி­வித்து உள்­ளது.

கடந்த மாதம், ‘மூடிஸ்’ நிறு­வ­னம், இந்­தி­யா­வின் கடன் தகுதி மதிப்­பீட்டை, பி.ஏ.ஏ-., 3ல் இருந்து, பி.ஏ.ஏ., 2 என்ற நிலைக்கு உயர்த்தி, சாத­க­மான பிரி­வில் இருந்து, ஸ்தி­ர­மான பிரி­விற்கு மாற்­றி­யது.இந்­தி­யா­வில் மேற்­கொள்­ளப்­படும், பொரு­ளா­தார, சமூக, நிர்­வாக சீர்­தி­ருத்­தங்­க­ளால், எதிர்­பார்க்­கப்­படும் வளர்ச்­சி­யின்அடிப்­ப­டை­யில், மதிப்­பீடு உயர்த்­தப்­பட்டு உள்­ள­தாக, ‘மூடிஸ்’ தெரி­வித்­தி­ருந்­தது.

இந்­நி­லை­யில், இந்­தி­யா­வின் கடன் தகுதி மதிப்­பீடு உயர்த்­தப்­பட்­ட­தற்­கான விரி­வான கார­ணங்­களை, ‘மூடிஸ் இன்­வெஸ்­டர்ஸ் சர்­வீஸ்’ நிறு­வ­னம்,‘இந்­தி­யா­விற்­குள்’ என்ற காலாண்டு இத­ழில் வெளி­யிட்டு உள்­ளது.

அதன் விப­ரம்:

இந்­தி­யா­வில், பொரு­ளா­தார, சமூக, நிர்­வாக சீர்­தி­ருத்­தங்­கள் தொடர்ந்து முனைப்­பு­டன் செயல்­ப­டுத்­தப்­ப­டு­கின்றன. இத­னால் அந்­நாடு, மேலும் அதிக வளர்ச்சி காண்­ப­தற்­கான ஆற்­றலை பெறும்.இதன் விளை­வாக, மத்­திய அர­சுக்கு, அதன் கடன்­களை எதிர்­கொள்­ளும் அள­விற்கு, வலு­வான, ஸ்தி­ர­மான நிதி­யா­தா­ரம் கிடைக்­கும். மத்­திய அர­சின் பல­வீ­னங்­களில் ஒன்­றாக, அதன் பொது கடன் உள்­ளது. சமீப ஆண்­டு­களில் மேற்­கொள்­ளப்­படும் சீர்­தி­ருத்­தங்­க­ளால், இந்த கடன் மேலும் அதி­க­ரிக்­கா­மல், ஸ்தி­ர­மாக இருக்­கும்.

எதிர்­பா­ரா­மல் நேரும் இடர்ப்­பா­டு­களின் போதும், இந்த கடன் சுமை நிலை­யா­கவே இருக்­கும் என்­பது மட்­டு­மின்றி, குறை­யும் என­வும் மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது.உள்­நாட்டு விமான சேவை­யில், பய­ணி­யர்எண்­ணிக்கை, இரு ஆண்­டு­களில், 20 சத­வீ­தத்­திற்­கும் மேலாக வளர்ச்சி கண்­டுள்­ளது.

இதற்கு, நடுத்­தர வரு­வாய் பிரி­வி­னர் அதி­க­ரித்து உள்­ள­தும், குறை­வான விமான கட்­ட­ணங்­களும் துணை புரிந்­துள்ளன. அத்­து­டன், ‘உதான்’ திட்­டம் உட்­பட, பிராந்­திய அள­வில் சிறிய நக­ரங்­களை இணைக்­கும் வகை­யில், விமான சேவை பர­வ­லாகி வரு­வ­தும் கார­ணம் என­லாம்.
உள்­நாட்டு பொரு­ளா­தாரவளர்ச்­சி­யால், இந்­தியகாப்­பீட்டு துறை பெரும் பய­ன­டைந்து வரு­கிறது. குறிப்­பாக, 2015 முதல் அறி­மு­க­மாகி வரும் ஒழுங்­கு­முறை கட்­டுப்­பா­டு­க­ளால், காப்­பீட்டு நிறு­வ­னங்­கள், பங்கு மூல­த­னத்தை அதி­க­ரிக்­க­வும், மறு காப்­பீடு வசதி பெற­வும் முடி­கிறது.

இது, காப்­பீட்டு நிறு­வ­னங்­களின், முத­லீட்டு சொத்­து­கள் மற்­றும் ரொக்க கையி­ருப்பு உயர வழி­வ­குத்து உள்­ளது. இத­னால், தற்­போது கீழ்­மட்­டத்­தில் உள்ள காப்­பீட்டு துறை­யின் வளர்ச்சி, நல்ல நிலைக்கு உய­ரும்.

பொதுத் துறை­யைச் சேர்ந்த, ஓ.என்.ஜி.சி., இந்­துஸ்­தான் பெட்­ரோ­லி­யம் நிறு­வ­னத்­தின் பெரும்­பான்மை பங்­கு­களை கைய­கப்­ப­டுத்த உள்­ளது. இது நிகழ்ந்­தால், ஓ.என்.ஜி.சி.,யின் கடன் தகுதி மதிப்­பீடு, பி.ஏ.ஏ., 1ல், ஸ்திர நிலை­யில் இருந்து, உச்ச நிலைக்கு உய­ரும்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement