Advertisement

‘இ – நாம்’ பண பரிவர்த்தனைக்கு ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி நியமனம்

புதுடில்லி:விவ­சா­யி­களின் விளை பொருட்­க­ளுக்கு, உரிய விலை கிடைக்­கச் செய்­யும் நோக்­கில், ‘இ – நாம்’ வலை­த­ளத்தை, 2016ல், மத்­திய அரசு அறி­மு­கப்­ப­டுத்­தி­யது.

இதில், 14 மாநி­லங்­க­ளைச் சேர்ந்த, 470 மொத்த விற்­பனை சந்­தை­கள் உறுப்­பி­ன­ராக இணைந்­துள்ளன. விவ­சா­யி­கள், தங்­கள் விளை பொருட்­களை, ‘இ – நாம்’ மூலம் விற்­பனை செய்­கின்­ற­னர். இதற்­கான பணப் பரி­வர்த்­தனை, தற்­போது, வங்கி கிளை­கள், ‘நெட் பேங்­கிங், டெபிட் கார்டு’ போன்­ற­வற்­றின் மூலம் நடக்­கிறது.

இந்­நி­லை­யில், இத்­த­கைய வலை­தள பணப் பரி­வர்த்­த­னை­க­ளுக்கு என, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்­கியை, மத்­திய அரசு நிய­மித்­துள்­ளது.இது குறித்து, அரசு அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது:‘இ – நாம்’ வலை­த­ளத்­தில், ரொக்­க­மில்லா பரி­வர்த்­த­னை­களை மேற்­கொள்­ளும் வச­தியை, மத்­திய அர­சின், ‘பீம்’ செயலி மற்­றும், யு.பி.ஐ., செயல்­பா­டு­கள் மூலம், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி
வழங்­கும்.

தற்­போது, விவ­சா­யி­கள், ஒரு சந்­தைக்­குள் தங்­கள் விளை பொருட்­களை விற்­பனை செய்­யும் வசதி உள்­ளது. விரை­வில், நாட்­டின் எந்த சந்­தை­யி­லும் விற்­பனை செய்­யும் வசதி அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement