Advertisement

சீன முதலீட்டிற்கு முதலிடம் சிங்கப்பூர்; இந்தியாவுக்கு 37

புதுடில்லி:சீனர்­கள் முத­லீடு செய்ய விரும்­பும் நாடு­களின் பட்­டி­ய­லில், அமெ­ரிக்­காவை பின்­னுக்கு தள்ளி, சிங்­கப்­பூர் முத­லி­டத்தை பிடித்­துள்­ளது.

இது குறித்து, எக்­னா­மிஸ்ட் இன்­டெ­லி­ஜன்ஸ் யூனிட் நிறு­வ­னம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை:
இந்­தாண்­டுக்­கான, சீனா­வின் முத­லீட்­டிற்கு உகந்த நாடு­கள் பட்­டி­ய­லில், சிங்­கப்­பூர் முத­லி­டத்தை பிடித்­துள்­ளது. அமெ­ரிக்கா, ஹாங்­காங், மலே­ஷியா, ஆஸ்­தி­ரே­லியா ஆகி­யவை, அடுத்த இடங்­களில் உள்ளன.

‘பிரிக்ஸ்’ நாடு­களில், ரஷ்யா, ஆறு இடங்­கள்முன்­னேறி, 11வது இடத்தை பிடித்­துள்­ளது. இந்­தியா, ஆறு இடங்­கள் கீழி­றங்கி, 37வது இடத்­தில் உள்­ளது. இந்­தியா – சீனா இடை­யி­லான, அர­சி­யல் பதற்­றம் கார­ண­மாக, இந்­தியா பின்­ன­டைவை சந்­தித்­துள்­ளது.இந்­தி­யா­வில், சீன நிறு­வ­னங்­கள் பல்­வேறு சவால்­களை சந்­தித்து வரு­கின்றன. இருந்த போதி­லும், பொரு­ளா­தா­ரத்­தில் முன்­ன­ணி­யில் உள்ள நாடு­களில், இந்­தி­யா­வில் வளர்ச்சி வாய்ப்­பு­கள் பிர­கா­ச­மாக உள்ளன.

அத­னால், சீனா­வைச் சேர்ந்த, ஹூவாய், ஜியோமி உள்­ளிட்ட பல நிறு­வ­னங்­கள், இந்­தி­யா­வில் தொழில் துவங்கி, வெற்­றி­க­ர­மாக செயல்­ப­டு­கின்றன.சீனா, முத­லீடு செய்ய விரும்­பும் நாடு­களில், பிரே­சில், 19 இடங்­கள் கீழி­றங்கி, 53வது இடத்தை பிடித்­துள்­ளது. தென் ஆப்­ரிக்கா, ஆறு இடங்­களில் முன்­னேறி, 44வது இடத்தை எட்­டி உள்­ளது. முக்­கிய ஆறு துறை­களில், அதிக முத­லீட்டை ஈர்க்­கும் நாடு­களில், அமெ­ரிக்கா, ஜப்­பான், இந்­தியா, ஈரான் உள்­ளிட்ட நாடு­கள் இடம் பெற்­றுள்ளன.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

பிரிட்டன் பின்னடைவு

ஐரோப்­பிய கூட்­ட­மைப்பில் இருந்து வில­கும் முடிவு கார­ண­மாக, சீனா­வின் விருப்­ப­மான முத­லீட்டு நாடு­கள் பட்­டி­ய­லில், பிரிட்­டன், 29 இடங்­கள் சரி­வ­டைந்து, 41வது இடத்­திற்கு தள்­ளப்­பட்டு உள்­ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement