Advertisement

பங்கு வெளியீட்டுக்கு வருகிறது டிரீம் கேட்வே ஓட்டல்ஸ்

கோல்கட்டா:ஜெயின் குழு­மத்­தைச் சேர்ந்த, டிரீம் கேட்வே ஓட்­டல்ஸ் நிறு­வ­னம், ரியல் எஸ்­டேட் மற்­றும் விருந்­தோம்­பல் துறை­களில் ஈடு­பட்டு வரு­கிறது. இந்­நி­று­வ­னம், புதிய பங்கு வெளி­யீட்­டுக்கு வர திட்­ட­மிட்டு உள்­ளது.

இது குறித்து, இக்­கு­ழு­மத்­தின் நிர்­வாக இயக்­கு­னர், ரிஷி ஜெயின் கூறி­ய­தா­வது:நிறு­வ­னம், புதிய பங்கு வெளி­யீட்­டின் வாயி­லாக, 39 கோடி ரூபாய் திரட்ட திட்­ட­மிட்டு உள்­ளது. இதில் ஒரு பகுதி, ஹாலிடே இன் கோல்­கட்டா ஏர்­போர்ட் ஓட்­டலை விரி­வு­ப­டுத்­து­வ­தற்கு பயன்­ப­டுத்­தப்­படும்.இந்த ஓட்­ட­லில் தற்­போது, 140 அறை­கள் உள்ளன. இதில், கூடு­த­லாக, 80 அறை­க­ளு­டன், 120 கோடி ரூபாய் செல­வில், பிர­மாண்ட விருந்து கூட­மும் அமைக்­கப்­படும்.

துர்­கா­புர், சிலி­குரி ஆகிய இடங்­களில், புதி­தாக, ஹாலிடே இன் ஓட்­டல்ஸ் அமைக்க முடிவு செய்­யப்­பட்டு உள்­ளது. -நிறு­வ­னத்­திற்கு தற்­போது, 68 கோடி ரூபாய் கடன் உள்­ளது.ஹாலிடே இன் ஓட்­டல்ஸ் பிராண்­டுக்­காக, இன்­டர்­கான்­டி­னென்­டல் ஓட்­டல்ஸ் குழு­மத்­து­டன், ஒப்­பந்­தம் செய்­யப்­பட்டு உள்­ளது.இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement