Advertisement

‘டெபிட் கார்டு’ பரிவர்த்தனை கட்டணம் குறைப்பால் வங்கிகளுக்கு பாதிப்பு

மும்பை:வணிக நிறு­வ­னங்­க­ளி­டம் வங்­கி­கள் வசூ­லிக்­கும், ‘டெபிட் கார்டு’ பரி­வர்த்­த­னைக்­கான கட்­ட­ணம், ஜன., 1 முதல் குறைக்­கப்­ப­டு­வ­தாக, ரிசர்வ் வங்கி அறி­வித்­துள்­ளது.
இதன்­படி, 2,000 ரூபாய் வரை­யில், ஒரு கடைக்­கா­ரர், டெபிட் கார்டு மூலம் மேற்­கொள்­ளும் பரி­வர்த்­த­னைக்­கான கட்­ட­ணம், 0.75லிருந்து, 0.40 சத­வீ­த­மாக குறைய உள்­ளது.

இத­னால், வியா­பா­ரி­கள், டெபிட் கார்டு பரி­வர்த்­த­னை­யில் ஆர்­வம் காட்­டு­வர் என்­ப­தால், மின்­னணு பணப் பரி­வர்த்­தனை அதி­க­ரிக்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.ஆனால், ‘டெபிட் கார்டு பரி­வர்த்­த­னை­கள், அந்த அள­விற்கு விரை­வாக அதி­க­ரிக்­காது; நீண்ட கால­மா­கும் என்­ப­தால், கட்­டண குறைப்­பால், வங்­கி­கள் இழப்பை சந்­திக்க நேரும்’ என, நிதி வல்­லு­னர்­கள் தெரி­வித்து உள்­ள­னர்.
இந்த வகை­யில், ‘ஐ.சி.ஐ.சி.ஐ., எஸ்.பி.ஐ., எச்.டி.எப்.சி., ஆக்­சிஸ் வங்கி ஆகிய நான்கு வங்­கி­களின் வரு­வாய், 0.3 சத­வீ­தம் குறை­யும்; லாபத்­தில், 1.1 சத­வீ­தம் சரி­யும்’ என, அமெ­ரிக்க நிதிச் சேவை நிறு­வ­ன­மான, ‘மார்­கன் ஸ்டான்லி’தெரி­வித்­துள்­ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement