Advertisement

ரூ.5,000 விலை குறைக்கப்பட்ட சியோமி ஸ்மார்ட்போன்

புதுடில்லி: இந்தியாவில் சியோமி மி மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன் அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் ரூ.37,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட மி மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ.5,000 குறைக்கப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

பிளிப்கார்ட் தளத்தில் நடைபெற்று வரும் சிறப்பு விற்பனையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகை குறுகிய காலத்திற்கு மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சியோமி ப்ரியர்கள் புதிய மி மிக்ஸ் 2 ஸ்மார்ட்போனினை ரூ.32,999 விலையில் வாங்கிட முடியும். விலை குறைப்பு மட்டுமின்றி சியோமி ஸ்மார்ட்போன் வாங்குவோர் தங்களது பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்து அதிகபட்சம் ரூ.18,000 வரை தள்ளுபடி பெற முடியும். இத்துடன் கூடுதலாக ரூ.99 செலுத்தி பைபேக் சலுகையை தேர்வு செய்யலாம். மாத தவணை முறை வசதியில் மி மிக்ஸ் 2 வாங்க விரும்புவோருக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது.

மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது 5 முதல் 10 சதவிகிதம் வரை உடனடி தள்ளுபடி பெற முடியும். சியோமியின் முதல் பெசல் லெஸ் ஸ்மார்ட்போன் என்ற பெருமையுடன் வெளியிடப்பட்டுள்ள மி மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர் கொண்டுள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement