Advertisement

பட்ஜெட்டிற்கு முந்தைய ஆலோசனை கூட்டம்

புதுடில்லி:மத்­திய நிதி அமைச்­சர், அருண் ஜெட்­லியை, நேற்று சந்­தித்த தொழில் கூட்­ட­மைப்பு பிர­தி­நி­தி­கள், கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­களின் வரியை குறைக்க வேண்­டும்; ஏற்­று­மதி வரு­வாய்க்கு, வரி விலக்கு அளிக்க வேண்­டும் என்­பது உள்­ளிட்ட கோரிக்­கை­களை வலி­யு­றுத்­தி­னர்.
வரும், 2018 -– 19ம் நிதி­யாண்­டிற்­கான மத்­திய பட்­ஜெட், 2018 பிப்., 1ல் தாக்­கல் செய்­யப்­படும் என, தெரி­கிறது.இதை­யொட்டி, நேற்று டில்­லி­யில் நடை­பெற்ற, பட்­ஜெட்­டிற்கு முந்­தைய ஆலோ­ச­னைக் கூட்­டத்­தில், தொழில் துறை பிர­தி­நி­தி­கள், அருண் ஜெட்­லியை சந்­தித்து, பல்­வேறு கோரிக்­கை­களை வலி­யு­றுத்­தி­னர்.
இதை­ய­டுத்து, அவர்­கள் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­ய­தா­வது:
பங்­கஜ் படேல், தலை­வர், இந்­திய வர்த்­த­கம் மற்­றும் தொழில் கூட்­ட­மைப்பு: ‘கார்ப்­ப­ரேட் நிறு­வன வரி, 30ல் இருந்து, 25 சத­வீ­த­மாக குறைக்­கப்­படும்’ என, இரு ஆண்­டு­க­ளுக்கு முன், அருண் ஜெட்லி தெரி­வித்­தி­ருந்­தார். அதன்­படி, வரும் பட்­ஜெட்­டில், வரியை, 18 – -25 சத­வீ­த­மாக குறைக்க வலி­யு­றுத்­தி­னோம்.
புதிய கண்­டு­பி­டிப்­பு
­க­ளுக்கு, அரசு ஆத­ர­வ­ளிக்க கேட்­டுக் கொண்­டோம். குறு, சிறு, நடுத்­தர தொழில்­கள் மற்­றும், ‘ஸ்டார்ட் அப்’ துறை­யில், அதிக முத­லீ­டு­களை ஈர்த்­தால், வேலை­வாய்ப்­பு­கள் உரு­வா­கும். குறிப்­பிட்ட துறை­களில், புதிய முத­லீ­டு­க­ளுக்கு சிறப்பு சலு­கை­கள் வழங்­க­லாம். வரி­கள் அல்­லது கட்­டுப்­பா­டு­கள் அற்ற, தயா­ரிப்பு வசதி உள்ள ஏற்­று­மதி மண்­ட­லங்­களை அமைக்க வேண்­டும் என, கூறி­யுள்­ளோம்.
ஷோபனா காமி­னேனி, தலை­வர், இந்­திய தொழி­லக கூட்­ட­மைப்பு: உல­க­ள­வில், கார்ப்­ப­ரேட் நிறு­வன வரி, இந்­தி­யாவை விட குறை­வா­கவே உள்­ளது. எனவே, அவ்­வ­ரியை, 18 சத­வீ­த­மாக குறைக்க வேண்­டும். அத்­து­டன், வரி விலக்கு மற்­றும் வரிச்­ச­லு­கை­கள், கூடு­தல் வரி, ஆயத்­தீர்வு ஆகி­ய­வற்­றை­யும் திரும்­பப் பெற வலி­யு­றுத்தி உள்­ளோம்.
தனி­யார் முத­லீ­டு­களை ஈர்க்க, தேவை மற்­றும் திறனை அதி­க­ரிக்க வேண்­டி­யது அவ­சி­யம். அதற்­கான திட்­டங்­கள் குறித்து, ஆலோ­சனை வழங்­கி­னோம்.பி.கே.ஷா, முன்­னாள் தலை­வர், இந்­திய பொறி­யி­யல் ஏற்­று­மதி மேம்­பாட்டு கூட்­ட­மைப்பு: அமெ­ரிக்­கா­வில், ஏற்­று­மதி வாயி­லான வரு­வாய்க்கு, தனி வரி விகி­தம் உள்­ளது. அத­னால், கார்ப்­ப­ரேட் வரி விகி­தத்தை விட, குறை­வான வரியை, ஏற்­று­ம­தியை சார்ந்­துள்ள நிறு­வ­னங்­க­ளுக்கு விதிக்க வேண்­டும் என, தெரி­வித்­தோம்.
சந்­தீப் ஜஜோ­டியா, தலை­வர், ‘அசோ­செம்’ அமைப்பு:
வளர்ந்த நாடு­களில் முத­லீ­டு­களை ஈர்த்து, வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்­கும் நோக்­கில், கார்ப்­ப­ரேட் வரி குறை­வாக நிர்­ண­யிக்­கப்­ப­டு­கிறது. இந்­தி­யா­வும், அதை பின்­பற்றி, வரியை குறைக்க வேண்­டும். மேலும் தற்­போது, 20 சத­வீ­த­மாக உள்ள, டிவி­டெண்டு வினி­யோக வரி­யை­யும் குறைக்க வேண்­டும்.
அகீல் அக­மது, துணைத் தலை­வர், தோல் ஏற்­று­மதி கூட்­ட­மைப்பு: நேரடி வரி­களை குறைக்­க­வும், மக­ளிர் வேலை­வாய்ப்­பு­களை ஊக்­கு­விக்­கும் திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்­த­வும், கோரிக்கை விடுத்­துள்­ளோம். ஜி.எஸ்.டி.,யில் செலுத்­திய வரியை, விரை­வாக திரும்ப பெற, ஆவன செய்­யும்­படி கேட்­டுக் கொண்­டோம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement