Advertisement

தேயிலை வாரிய இணைப்பு திட்டம் நிறுத்தம்

கோல்கட்டா:‘‘தேயிலை வாரி­யத்தை, இதர வாரி­யங்­க­ளு­டன் இணைக்­கும் திட்­டத்தை, மத்­திய அரசு நிறுத்தி வைத்­துள்­ளது,’’ என, தேயிலை வாரிய தலை­வர், பி.கே.பேஜ்­ப­ரூவா தெரி­வித்து உள்­ளார்.
இது குறித்து, அவர் மேலும் கூறி­ய­தா­வது:
தேயிலை வாரி­யம், காபி வாரி­யம், ரப்­பர் வாரி­யம், மசாலா பொருட்­கள் வாரி­யம் ஆகி­ய­வற்றை இணைத்து, ஒரே குடை­யின் கீழ் கொண்டு வர, மத்­திய அரசு திட்­ட­மிட்­டுள்­ளது.இதில், தற்­போது இதர வாரி­யத்­து­டன், தேயிலை வாரி­யத்தை இணைக்­கும் திட்­டம், நிறுத்தி வைக்­கப்­பட்டு உள்­ளது.
தற்­போது, தேயிலை வாரி­யம் தனி­யா­கவே செயல்­படும். இந்­திய தேயி­லைக்கு, வெளி­நா­டு­களில் பெரும் வர­வேற்பு உள்­ளது. இதை பயன்­ப­டுத்தி, தேயிலை ஏற்­று­ம­தியை அதி­க­ரிக்க வேண்­டும். புதிய சந்­தை­களை அடை­யா­ளம் காண்­ப­தன் மூலம், தேயிலை ஏற்­று­மதி இலக்கை சுல­ப­மாக எட்ட முடி­யும்.
அமைப்பு சார்ந்த துறை­யி­ன­ரு­டன், சிறிய தேயிலை விவ­சா­யி­கள் இணைந்து பணி­யாற்ற முன்­வர வேண்­டும். மொத்த உற்­பத்­தி­யில், சிறிய தேயிலை விவ­சா­யி­கள் பங்­க­ளிப்பு, 46 சத­வீ­த­மாக உள்­ளது.இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement