Advertisement

தொழில் துறை உற்பத்தியில் வளர்ச்சி; சில்லரை பணவீக்கமும் குறைந்தது

புதுடில்லி : நாட்­டின் தொழில்­துறை உற்­பத்தி, ஒன்பது மாதங்­களில் இல்­லாத அள­விற்கு, ஆகஸ்­டில் அதி­க­ரித்­து உள்­ளது. செப்­டம்­ப­ரில் சில்­லரை பண­வீக்­கம் குறைந்­துள்­ளது.

நடப்பு நிதி­யாண்­டின் முதல் காலாண்­டில், நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்சி, 5.7 சத­வீ­த­மாக குறைந்­ததை அடுத்து, கடு­மை­யான விமர்­ச­னங்­களை எதிர்­கொண்டு வரும், பிர­த­மர் மோடி தலை­மை­யி­லான அர­சுக்கு, ஆறு­தல் தரும் வித­மாக, தொழில் ­துறை உற்­பத்தி வளர்ச்சி மற்­றும் சில்­லரை பண­வீக்­கம் குறைவு என்ற தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது.

இது குறித்து, மத்­திய புள்­ளி­யி­யல் அலு­வ­ல­கம் வெளி­யிட்­டு உள்ள அறிக்கை: நாட்­டின் தொழில் ­துறை உற்­பத்தி, ஒன்பது மாதங்­களில் இல்­லாத அள­விற்கு, ஆகஸ்­டில், 4.3 சத­வீ­த­மாக வளர்ச்சி கண்­டுள்­ளது. இது, ஜூலை­யில், 1.2 சத­வீ­த­மாக அறி­விக்­கப்­பட்டு, மறு­ம­திப்­பீட்­டில், 0.94 சத­வீ­த­மாக நிர்­ண­யிக்­கப்­பட்­டி­ருந்­தது. கடந்த ஆண்டு ஆகஸ்­டில், தொழில் துறை உற்­பத்தி வளர்ச்சி, 4 சத­வீ­த­மாக இருந்­தது. இதற்கு முன், 2016 நவம்­ப­ரில், தொழில் ­துறை உற்­பத்தி வளர்ச்சி, அதி­க­பட்­ச­மாக, 5.7 சத­வீ­தத்தை எட்­டி­யி­ருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது. சுரங்­கம், மின்­சா­ரம் மற்­றும் பொறி­யி­யல் சாத­னங்­கள் துறை­களின் செயல்­பாடு கார­ண­மாக, தொழில்­துறை உற்­பத்தி வளர்ச்சி கண்­டுள்­ளது.

சுரங்­கம் மற்­றும் மின்­ து­றை­களின் வளர்ச்சி, 2016 ஆக., உடன் ஒப்­பி­டும் போது, இந்­தாண்டு ஆகஸ்டில், முறையே, 9.4 சத­வீ­தம் மற்­றும் 8.3 சத­வீ­த­மாக உயர்ந்­துள்ளன. இதே காலத்­தில், அடிப்­படை பொருட்­கள், பொறி­யி­யல் சாத­னங்­கள், அடிப்­படை கட்­ட­மைப்பு மற்­றும் கட்­டு­மான பொருட்­கள் உற்­பத்தி, முறையே, 7.1 சத­வீ­தம், 5.4 சத­வீ­தம் மற்­றும், 2.5 சத­வீ­த­மாக வளர்ச்சி அடைந்­து உள்ளன. இதே காலத்­தில், நுகர்­வோர் சாத­னங்­கள் மற்­றும் நுகர்­வோர் சாரா சாத­னங்­கள் துறை­களின் வளர்ச்சி, முறையே, 1.6 சத­வீ­தம் மற்­றும் 6.9 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது.

தொழில்­ துறை உற்­பத்தி குறி­யீட்டை கணக்­கி­டு­வ­தில், தயா­ரிப்பு துறை­யின் பங்கு, 77.63 சத­வீ­த­மாக உள்­ளது. மதிப்­பீட்டு காலத்­தில், இத்­து­றை­யின் உற்­பத்தி, 5.5 சத­வீ­தத்­தில் இருந்து, 3.1 சத­வீ­த­மாக குறைந்­துள்­ளது. இருந்­த­போ­தி­லும், ஆகஸ்­டில், தயா­ரிப்பு துறை­யைச் சேர்ந்த, 23 தொழில் பிரி­வு­களில், 10 பிரி­வு­கள் வளர்ச்சி கண்­டுள்ளன. குறிப்­பாக, கம்ப்­யூட்­டர், மின்­னணு மற்­றும் கண்­ணாடி பொருட்­கள் துறை, 24.9 சத­வீ­தம் ஏற்­றம் பெற்­றுள்­ளது. இதைத் தொடர்ந்து, மருந்து, மருத்­துவ ரசா­ய­னம், உயி­ரி­யல் பொருட்­கள் துறை, 16.5 சத­வீ­தம் வளர்ச்சி கண்­டுள்­ளது. இவ்­வாறு அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பருவ மழையால் சாதகம்:
நாட்­டின் சில்­லரை பண­வீக்­கம், செப்­டம்­ப­ரில், 3.28 சத­வீ­த­மாக குறைந்­துள்­ளது. இது, ஆகஸ்­டில், 3.36 சத­வீ­த­மாக இருந்­தது. பருவ மழை­யைத் தொடர்ந்து, உண­வுப் பொருட்­கள் விலை குறைந்­த­தால், சில்­லரை பண­வீக்­கம் சரி­வ­டைந்­துள்­ளது. உண­வுப் பொருட்­களின் சில்­லரை பண­வீக்­கம், 1.25 சத­வீ­த­மாக குறைந்­துள்­ளது. இது, ஆகஸ்டில், 1.52 சத­வீ­த­மாக இருந்­தது. இதே காலத்­தில், எரி­பொ­ருள் பண­வீக்­கம், 4.94 சத­வீ­தத்­தில் இருந்து, 5.56 சத­வீ­த­மாக அதி­க­ரித்­துள்­ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement