Advertisement

டி.சி.எஸ்., நிகர லாபம் உயர்வு: ரூ.7 டிவிடெண்டு அறிவிப்பு

பெங்களூரு : டி.சி.எஸ்., எனப்­படும் டாடா கன்­சல்­டன்சி சர்­வீ­சஸ் நிறு­வ­னத்­தின் நிகர லாபம், ஜூலை – செப்., வரை­யி­லான இரண்­டா­வது காலாண்­டில், 8.4 சத­வீ­தம் உயர்ந்து, 6,446 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துஉள்­ளது. இது, முதல் காலாண்­டில், 5,945 கோடி ரூபா­யாக இருந்­தது. இதே காலத்­தில், இந்­நி­று­வ­னத்­தின் வரு­வாய், 3.2 சத­வீ­தம் உயர்ந்து, 30,541 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­து உள்­ளது.

இந்­நி­று­வ­னம், அதன் பங்கு முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு, பங்கு ஒன்­றுக்கு, ஏழு ரூபாய் டிவி­டெண்டு வழங்­கு­வ­தாக அறி­வித்­துள்­ளது. டி.சி.எஸ்., மதிப்­பீட்டு காலாண்­டில், 15,868 பேரை பணிக்கு அமர்த்­தி­யுள்­ளது. ‘‘வாடிக்­கை­யா­ளர்­கள், மின்­னணு தொழில்­நுட்ப வச­திக்கு அதிக அள­வில் செல­விட்டு வரு­வது, நிறு­வ­னத்­தின் வரு­வாய் வளர்ச்­சிக்கு துணை புரிந்­துள்­ளது,’’ என, டி.சி.எஸ்.,நிறு­வ­னத்­தின் தலைமை செயல் அதி­காரி, ராஜேஸ் கோபி­நா­தன் தெரி­வித்­துள்­ளார்.

டி.சி.எஸ்., நிறு­வ­னத்­தின் சாத­க­மான நிதி­நிலை அறிக்கை கார­ண­மாக, நேற்று, அதன் பங்­கின் விலை, 46.55 ரூபாய் அதி­க­ரித்து, 2,546.90 ரூபா­யில் நிலை பெற்­றது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement