Advertisement

குறுகிய கால கடன்; எஸ்.பி.ஐ., அறிமுகம்

மும்பை : எஸ்.பி.ஐ., எனப்­படும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்­தியா, குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்கு, குறு­கியகால மூல­தன கடன் வழங்­கு­வ­தற்கு, ‘எஸ்.எம்.இ., அசிஸ்ட்’ எனும் திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்தி உள்­ளது.

இது குறித்து, எஸ்.பி.ஐ., வெளி­யிட்­டுள்ள அறிக்கை: எஸ்.எம்.இ., அசிஸ்ட் திட்­டத்­தில், நிறு­வ­னங்­கள் செலுத்­திய, ஜி.எஸ்.டி.,யில், திரும்­பப் பெற உள்ள, உள்­ளீட்டு வரி ஆதா­யத்­தின் அடிப்­ப­டை­யில், கடன் வழங்­கப்­படும். இத்­திட்­டத்­தில், குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­கள், குறைந்த வட்­டி­யில், குறு­கிய கால கடன் பெற்று, தவ­ணை­யில் திரும்ப செலுத்­த­லாம். இந்த கடன் வசதி மூலம், நிறு­வ­னங்­கள், உள்­ளீட்டு வரி ஆதா­யத்தை திரும்­பப் பெறும் வரை, மூல­தன தேவை­களை சமா­ளிக்­க­லாம். இத்­திட்­டத்­தின் செய­லாக்க கட்­ட­ணம், 2,000 ரூபாய்.

கடன் வேண்டி விண்­ணப்­பிக்­கும் நிறு­வ­னங்­கள், உள்­ளீட்டு வரி பயனை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­காக, ‘ஆடிட்­டர்’ கையொப்­ப­மிட்ட சான்­றி­தழை சமர்ப்­பிக்க வேண்­டும். வங்­கி­யின் வாடிக்­கை­யா­ளர்­க­ளாக உள்ள, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­கள், 2018 மார்ச், 31 வரை, இத்­திட்­டத்­தின் மூலம் பயன் பெற­லாம். இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement