Advertisement

பார்தி ஏர்­டெல் நிறு­வ­னத்­தில் டாடா டெலி­சர்­வீ­சஸ் இணை­கிறது

புது­டில்லி : தொடர் இழப்பு, கடன் சுமை ஆகி­யவை கார­ண­மாக, டாடா டெலி­சர்­வீ­சஸ் நிறு­வ­னம், பார்தி ஏர்­டெல் நிறு­வ­னத்­து­டன் இணை­கிறது.

இது குறித்து, இந்­நி­று­வ­னங்­கள் வெளி­யிட்­டு உள்ள கூட்­ட­றிக்கை: டாடா டெலி­சர்­வீ­சஸ் நிறு­வ­னம், பார்தி ஏர்­டெல் நிறு­வ­னத்­து­டன் இணை­கிறது. இதன் மூலம், டாடா டெலி­சர்­வீ­சஸ் மற்­றும் டாடா டெலி­சர்­வீ­சஸ் மஹா­ராஷ்­டிர நிறு­வ­னங்­களின், 19 தொலை­ தொ­டர்பு வட்­டங்­க­ளைச் சேர்ந்த, நான்கு கோடி வாடிக்­கை­யா­ளர்­கள், பார்தி ஏர்­டெல் வாடிக்­கை­யா­ளர்­க­ளாக மாறு­வர். ஒழுங்­கு­முறை கட்­டுப்­பாட்டு அமைப்­பு­களின் அனு­ம­திக்­குப் பின், இந்த இணைப்பு நட­வ­டிக்கை துவங்­கும்.

டாடா டெலி­சர்­வீ­சஸ் நிறு­வ­னத்தை இணைத்­துக் கொள்­வ­தற்­காக, அதன், 40 ஆயி­ரம் கோடி ரூபாய் கடனை, பார்தி ஏர்­டெல் ஏற்­காது. அது­போல, இந்த இணைப்பு நட­வ­டிக்­கைக்கு, ரொக்­க­மும் வழங்­கப்­ப­டாது. அகண்ட அலை­வ­ரிசை உரி­மத்­திற்­கான, 9,000 – 10 ஆயி­ரம் கோடி ரூபா­யில், செலுத்த வேண்­டிய, 70 – 80 சத­வீத தொகை­யை­யும், டாடா குழு­மமே செலுத்­தும்.

‘‘பல வகை­யில் சிந்­தித்து, இந்த இணைப்பு நட­வ­டிக்­கையை எடுத்­துள்­ளோம். இது, பங்கு முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு பயன் அளிக்­கும்,’’ என, டாடா சன்ஸ் தலை­வர், என்.சந்­தி­ர­சே­க­ரன் தெரி­வித்­துள்­ளார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement