Advertisement

தீபாவளிக்காக ஜியோ அறிவித்துள்ள புதிய சலுகை

மும்பை: ரிலையன்ஸ் ஜியோ தீபாவளி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய தண் தணா தண் சலுகையின் கீழ் ரூ.399 ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 100 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ஜியோ அறிவித்துள்ள கேஷ்பேக் அனைத்து பிரைம் வாடிக்கையாளர்களுக்கும் தள்ளுபடி கூப்பன்களாக வழங்கும், இவற்றை அடுத்த ஐந்து ரீசார்ஜ்களுக்கு பயன்படுத்த முடியும்.

ஜியோ தீபாவளி சலுகையானது அக்டோபர் 12-ம் தேதி துவங்கி அக்டோபர் 18-ம் தேதி வரை வழங்கப்படுகிறது. தீபாவளி சலுகையை பெற ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.50 மதிப்புள்ள எட்டு சலுகை கூப்பன்கள் (மதிப்பு ரூ.400) வழங்கப்படுகிறது. எனினும் இந்த சலுகை கூப்பன்களை நவம்பர் 15-ம் தேதி முதல் ஒரு சமயத்தில் ஒரு கூப்பன் மட்டுமே பயன்படுத்த முடியும்.

ஜியோ சலுகைகளின் வேலிடிட்டியை பொருத்து தீபாவளி சலுகை நீட்டிக்கப்படுகிறது. அந்த வகையில் ரூ.399 ரீசார்ஜ் செய்வோருக்கு, அவர்கள் ஏற்கனவே பயன்படுத்தி வரும் திட்டம் நிறைவுற்றதும் புதிய தண் தணா தண் வேலிடிட்டி துவங்கும். அதாவது நவம்பர் 12-ம் தேதி உங்களது தற்போதைய திட்டம் நிறைவுபெறும் பட்சத்தில் தீபாவளி சலுகை அதே நாள் முதல் ஆக்டிவேட் ஆகும்.

ஜியோ ரூ.399 திட்டத்தின் கீழ் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இதில் தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமி்ட்டெட் வாய்ஸ் கால் மற்றும் எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. தினசரி 1 ஜிபி டேட்டா பயன்படுத்தியதும் டேட்டா வேகம் நொடிக்கு 128 கே.பி-யாக குறைக்கப்பட்டு விடும். ஜியோ தனது சலுகைகளை அக்டோபர் 19-ம் தேதி முதல் மாற்றியமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement