Advertisement

‘ஓட்டல்களின் சேவை கட்டண வருவாய்க்கு வரி’

புதுடில்லி: மத்­திய நுகர்­வோர் விவ­கா­ரங்­கள் துறை அமைச்­சர், ராம்­வி­லாஸ் பஸ்­வான், டுவிட்­ட­ரில் வெளி­யிட்­டுள்ள செய்தி: ‘வாடிக்­கை­யா­ள­ரி­டம் இருந்து, சேவை கட்­ட­ணம் வசூ­லிக்­கக் கூடாது’ என, ஏப்­ர­லில் வெளி­யிட்ட, அனைத்து ஓட்­டல்­கள் மற்­றும் உண­வ­கங்­க­ளுக்­கான விதி­மு­றை­களில், தெளி­வாக குறிப்­பி­டப்­பட்டு உள்­ளது.

எந்­த­வொரு ஓட்­ட­லும், வாடிக்­கை­யா­ளரை கட்­டா­யப்­ப­டுத்தி, சேவை கட்­ட­ணம் வசூ­லிக்­கக் கூடாது. வாடிக்­கை­யா­ளர் விரும்­பி­னால், சேவை கட்­ட­ணம் தர­லாம். அதற்­காக, ஓட்­டல் ரசீ­தில், சேவை கட்­ட­ணம் பகு­தி­யில் எது­வும் குறிப்­பிட வேண்­டாம் என, அறி­வு­றுத்­தப்­பட்டு உள்­ளது.

அப்­ப­டியே சேவை கட்­ட­ணம் குறிப்­பிட்­டா­லும், அதன் அருகே, ‘வாடிக்­கை­யா­ள­ரின் விருப்­பத்தை பொறுத்­தது’ என்ற வாச­கத்தை அச்­சிட வேண்­டும். ஆனால், பல ஓட்­டல்­கள், சேவை கட்­ட­ணம் வசூ­லிப்­ப­தாக, புகார்­கள் வருகின்றன. அத­னால், ‘ஓட்­டல்­கள் வசூ­லிக்­கும் சேவை கட்­ட­ணத்தை, அவற்­றின் வரு­வா­யு­டன் சேர்த்து கணக்­கிட்டு வரி வசூ­லிக்க வேண்­டும்’ என, மத்­திய நேரடி வரி­கள் வாரி­யத்­திற்கு கடி­தம் அனுப்பி உள்­ளேன். இவ்­வாறு கூறப்­பட்­டுள்­ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement