Advertisement

திவால் நிறுவனங்களுக்கு வரி விலக்கு; ‘அசோசெம்’ அமைப்பு கோரிக்கை

புதுடில்லி: ‘திவால் நட­வ­டிக்­கைக்கு ஆளான நிறு­வ­னங்­க­ளுக்கு, வரி விலக்கு உள்­ளிட்ட சலு­கை­களை வழங்க வேண்­டும்’ என, ‘அசோ­செம்’ அமைப்பு வலி­யு­றுத்தி உள்­ளது.

ரிசர்வ் வங்கி, வாராக்­க­டன் தொடர்­பாக, 12 நிறு­வ­னங்­கள் மீது, திவால் நட­வ­டிக்கை மேற்­கொள்ள, வங்­கி­க­ளுக்கு உத்­த­ர­விட்டு உள்­ளது. இதை­ய­டுத்து, இந்­நி­று­வ­னங்­கள் மீது, தேசிய நிறு­வ­னங்­கள் சட்ட தீர்ப்­பா­யம், திவால் நட­வ­டிக்­கை­களை துவக்கி உள்­ளது.

இந்­நி­லை­யில், ‘திவால் நிறு­வ­னங்­க­ளுக்­கான தீர்வு திட்­டத்­தின் கீழ், தள்­ளு­ப­டி­யா­கும் வட்­டித் தொகை உள்­ளிட்ட கடன் நிலு­வைக்கு, வரு­மான வரி, குறைந்­த­பட்ச மாற்று வரி ஆகி­ய­வற்­றில் விலக்­க­ளிக்க வேண்­டும்’ என, ‘அசோ­செம்’ கோரிக்கை விடுத்­துள்­ளது. மேலும், திவால் நிறு­வ­னங்­க­ளுக்கு, பொது வரி தவிர்ப்பு விதி­களில், விலக்­க­ளிக்க வேண்­டும் என்­பது உள்­ளிட்ட கோரிக்­கை­களை வலி­யு­றுத்தி, மத்­திய நிதி சேவை­கள் துறைக்கு கடி­தம் அனுப்பி உள்­ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement