Advertisement

தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 அதிகரிப்பு

சென்னை : தங்கம் விலை கடந்த இரு தினங்களாக சரிவை சந்தித்த நிலையில் இன்று(செப்., 13-ம் தேதி) சவரனுக்கு ரூ.64 உயர்ந்துள்ளது.

சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், காலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,865-க்கும், சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ரூ.22,920-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.30,640-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் சிறிது உயர்ந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 10 காசுகள் உயர்ந்து ரூ.44-க்கும், பார்வெள்ளி கிலோ ரூ.41,080-க்கும் விற்பனையாகிறது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement