Advertisement

தொழில் துறை உற்பத்தியில் வளர்ச்சி; சில்லரை பணவீக்கம் 1 சதவீதம் உயர்வு : மத்திய அரசு அறிக்கை

புதுடில்லி : கடந்த ஜூலை­யில், தொழில் துறை உற்­பத்தி சிறிது வளர்ச்சி கண்­டுள்ள நிலை­யில், காய்­க­றி­கள், பழங்­கள், எரி­பொ­ருள் ஆகி­ய­வற்­றின் விலை உயர்­வால், ஆகஸ்­டில், சில்­லரை பண­வீக்­கம், 1 சத­வீ­தம் உயர்ந்­துள்­ளது.

இது குறித்து, மத்­திய புள்­ளி­யி­யல் அமைச்­ச­கம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை: ஜூலை­யில், தொழில் துறை உற்­பத்தி, 1.2 சத­வீ­தம் வளர்ச்சி கண்­டுள்­ளது. இத்­து­றை­யின் உற்­பத்தி வளர்ச்சி, ஜூன் மாதம், 0.1 சத­வீ­தம் பின்­ன­டை­வைக் கண்­டி­ருந்­தது; இது, முந்­தைய, 48 மாதங்­களில் இல்­லாத அள­விற்கு ஏற்­பட்ட சரி­வா­கும். இந்த பின்­ன­டை­வில் இருந்து மீண்டு, தொழில் துறை, வளர்ச்சி பாதைக்கு திரும்பி உள்­ள­தற்கு, சுரங்­கம் மற்­றும் மின் துறை­கள் குறிப்­பி­டத்­தக்க பங்­க­ளிப்பை வழங்­கி­யுள்ளன.

சுரங்­கத் துறை உற்­பத்தி, 4.8 சத­வீ­தம்; மின்­ துறை உற்­பத்தி, 6.5 சத­வீ­தம் என்ற அள­வில் வளர்ச்சி கண்­டுள்ளன. தொழில் துறை உற்­பத்­தியை கணக்­கி­டு­வ­தில், குறிப்­பி­டத்­தக்க பங்­க­ளிப்பை, தயா­ரிப்புத் துறை வழங்கி வரு­கிறது. இத்­து­றை­யின் உற்­பத்தி வளர்ச்சி, ஜூலை­யில், 0.1 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது; இது, மே மாதம், 2.6 சத­வீ­த­மாக அதி­க­ரித்­தி­ருந்த நிலை­யில், ஜூனில், 0.4 சத­வீ­த­மாக சரி­வ­டைந்­தி­ருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது. பொறி­யி­யல்சாத­னங்­கள் துறை­யின் உற்­பத்தி வளர்ச்­சி­யில் ஏற்­பட்­டுள்ள பின்­ன­டைவு, 1 சத­வீ­தம் என்ற அள­விற்கு உள்­ளது.

இந்த பின்­ன­டைவு, ஜூன் மாதம், 6.8 சத­வீ­த­மா­க­வும், மே மாதம், 1.38 சத­வீ­த­மா­க­வும் இருந்­தது. நடப்பு, 2017 – 18ம் நிதி­யாண்­டில், ஏப்., – ஜூலை வரை­யி­லான நான்கு மாதங்­களில், தொழில் துறை உற்­பத்தி வளர்ச்சி, 1.7 சத­வீ­த­மாக உள்­ளது. இது, கடந்த நிதி­யாண்­டின், இதே காலத்­தில், 6.5 சத­வீ­த­மாக இருந்­தது. ஜி.எஸ்.டி., அறி­மு­கம், தொழில் துறை உற்­பத்­தி­யில் பெரிய அள­வில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தா­மல், சிறி­த­ளவு வளர்ச்­சிக்கு துணை புரிந்­தி­ருப்­பது, நல்ல அறி­குறி என, வல்­லு­னர்­கள் கருத்து தெரி­வித்­துள்­ள­னர்.

5 மாதத்தில் இல்லாத அளவு:
ஆக., மாதம், நாட்­டின் சில்­லரை பண­வீக்­கம், 1 சத­வீ­தம் அதி­க­ரித்து, 3.36 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது. இது, ஜூலை­யில், 2.36 சத­வீ­த­மாக இருந்­தது. இந்­தாண்டு மார்ச்­சில், சில்­லரை பண­வீக்­கம், 3.89 சத­வீ­த­மாக உயர்ந்து காணப்­பட்­டது. காய்­க­றி­கள், பழங்­கள், எரி­பொ­ருள் ஆகி­ய­வற்­றின் விலை உயர்­வால், சில்­லரை பண­வீக்­கம், ஐந்து மாதங்­களில் இல்­லாத அள­விற்கு அதி­க­ரித்­துள்­ளது. பழங்­கள், காய்­க­றி­கள் பண­வீக்­கம், முறையே, 5.29 சத­வீ­தம் மற்­றும் 6.16 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது. இவை, ஜூலை­யில், முறையே, 2.83 சத­வீ­தம் மற்­றும் மைனஸ், 3.57 சத­வீ­தம் என்ற அள­வில் இருந்­தன.

மதிப்­பீட்டு மாதத்­தில், உணவு தானி­யங்­கள், சமை­யல் எண்­ணெய், மாமி­சம் மற்­றும் மீன் ஆகிய மூன்று பிரி­வு­களின் பண­வீக்­கம், முறையே, 3.87 சத­வீ­தம், 1.03 சத­வீ­தம் மற்­றும் 2.94 சத­வீ­த­மாக குறைந்­துள்ளன. உட­னடி உண­வு­கள், நொறுக்­குத் தீனி­கள், இனிப்பு வகை­கள் ஆகி­ய­வற்­றின் பண­வீக்­கம், 0.43 சத­வீ­தத்­தில் இருந்து, 1.96 சத­வீ­த­மாக அதி­க­ரித்­துள்­ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement