Advertisement

இந்திய மருத்துவ சுற்றுலா துறை முன்னேறிய நாடுகளை விஞ்சும்

புதுடில்லி : ‘‘இந்­தியா, மருத்­துவ சுற்­றுலா துறை­யில், முன்­னே­றிய நாடு­களை விஞ்­சும் வகை­யில் வளர்ச்சி கண்டு வரு­கிறது,’’ என, மத்­திய வர்த்­தக துறை செய­லர் ரீடா தியோ­தியா தெரி­வித்து உள்­ளார்.பெங்­க­ளூ­ரில், அக்., 12 – 14 வரை­யில், இந்­தி­யா­வின் ஆரோக்­கிய பரா­ம­ரிப்பு துறை குறித்த சர்­வ­தேச மாநாடு நடை­பெற உள்­ளது.இது குறித்து, ரீடா தியோ­தியா கூறி­ய­தா­வது:இந்­தியா, ஆரோக்­கிய பரா­ம­ரிப்­பி­லும், அது சார்ந்த சேவை­கள் ஏற்­று­ம­தி­யி­லும், மிகச் சிறப்­பான மைய­மாக திகழ்­வதை, இந்த மாநாடு உல­குக்கு உணர்த்­தும்.இந்த மாநாட்­டில், அமெ­ரிக்கா, பிரிட்­டன், ஐரோப்பா, ஆப்­ரிக்கா, மத்­திய கிழக்கு மற்­றும் ஆசி­யா­வைச் சேர்ந்த, 70 நாடு­கள் பங்­கேற்­கின்றன. மருத்­துவ துறை­யைச் சேர்ந்த, 600க்கும் மேற்­பட்ட நிறு­வ­னங்­கள் கலந்து கொள்கின்றன. அமெ­ரிக்கா, சிங்­கப்­பூர், மலே­ஷியா போன்ற நாடு­கள் கோலோச்சி வந்த மருத்­துவ சுற்­றுலா துறை­யில், தற்­போது, இந்­தியா, மிக வலு­வான தடத்தை பதித்து வளர்ச்சி கண்டு வரு­கிறது.இத்­து­றையை ஊக்­கு­விக்க, மத்­திய அரசு பல்­வேறு நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கிறது. அயல்­நாட்டு சுற்­றுலா பய­ணி­யர், மருத்­துவ சிகிச்சை விசா­வில், இந்­தியா வரு­வ­தற்­கான நடை­மு­றை­கள் எளி­மை­யாக்­கப்­பட்டு உள்ளன. அத­னால், மிக சுல­ப­மாக, மருத்­துவ சுற்­றுலா பெற வழி ஏற்­பட்­டுள்­ளது. இதில், மேலும் பிரச்­னை­கள் இருந்­தால், அதை­யும் சரி செய்ய, அரசு தயா­ராக உள்­ளது.இத்­துறை சார்ந்­தோர், ஆரோக்­கிய பரா­ம­ரிப்பு துறை வளர்ச்­சிக்­கான கொள்­கை­கள், செயல் திட்­டங்­கள், தேவை­யான ஒழுங்­கு­மு­றை­கள், தர­மான மருத்­துவ சிகிச்­சைக்­கான வழி­மு­றை­கள் உள்­ளிட்ட ஆலோ­ச­னை­களை, அர­சுக்கு வழங்­க­லாம்.இவ்­வாறு அவர் கூறி­னார்.இந்­திய வர்த்­த­கம் மற்­றும் தொழில் கூட்­ட­மைப்­பின் செயல் தலை­வர், ஏ.திதர் சிங் கூறி­ய­தா­வது:வரும், 2020ல், இந்­திய மருத்­துவ சுற்­றுலா துறைக்கு, 900 கோடி டாலர் வர்த்­தக வாய்ப்­பு­கள் உள்­ள­தாக மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது. இதை முழு­மை­யாக பயன்­ப­டுத்­திக் கொள்ள, மருத்­துவ சுற்­றுலா துறையை விரி­வு­ப­டுத்தி, மிக வலி­மை­யான மதிப்­பு­டை­ய­தாக மாற்ற வேண்­டும். குறிப்­பாக, நோயா­ளி­க­ளுக்கு தர­மான மருத்­துவ சிகிச்­சையை நியா­ய­மான விலை­யில் வழங்க வேண்­டும். நோயா­ளி­களை, மாற்று மருத்­துவ சிகிச்­சை­யில் குணப்­ப­டுத்­து­வ­தற்­கான ஆய்­வு­களை மேற்­கொள்ள வேண்­டும்.இது போன்ற நட­வ­டிக்­கை­கள், மருத்­துவ சுற்­றுலா துறை வளர்ச்­சிக்கு துணை புரி­யும். இந்­தி­யா­வில், மிகச் சிறந்த மருத்­துவ நிபு­ணர்­கள் உள்­ள­னர். அது போல, மிகச் சிறந்த மருத்­துவ சிகிச்சை வச­தி­கள் உள்ளன. இத்­த­கைய ஆற்­றலை வெளிப்­ப­டுத்தி, இதர நாடு­க­ளு­டன் இந்­தியா இணைந்து செயல்­ப­டு­வ­தற்­கான வாய்ப்பை, பெங்­க­ளூரு மாநாடு வழங்­கும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement