Advertisement

ஆடைகள், காலணிகள் ஏற்றுமதிக்கு சரியான வாய்ப்பு

புதுடில்லி : ‘சர்­வ­தேச சந்­தை­யில், ஆடை, தோல், காலணி ஆகிய துறை­களில், சீனா­வின் பங்கு குறைந்து வரு­வ­தால், இத்­து­றை­களில் ஏற்­று­ம­தியை அதி­க­ரிக்க, இந்­தி­யா­வுக்கு இது தான் சரி­யான வாய்ப்பு’ என, பார்லி.,யில் தாக்­கல் செய்­யப்­பட்ட இடைக்­கால பொரு­ளா­ தார ஆய்­வ­றிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.அதன் விப­ரம்:சீனா­வில் உற்­பத்தி மற்­றும் சரக்கு போக்­கு­வ­ரத்து செலவு அதி­க­ரித்­துள்­ளது. அத்­து­டன், தொழி­லா­ளர் ஊதி­ய­மும் உயர்ந்­துள்­ளது.இத­னால், சீனா­வின் ஆடை, தோல், காலணி ஆகி­ய­வற்­றின் ஏற்­று­மதி குறைந்­துள்­ளது. இந்த வாய்ப்பை பயன்­ப­டுத்தி, இத்­து­றை­களின் ஏற்­று­ம­தியை, இந்­தியா அதி­க­ரிக்க வேண்­டும். இதற்­காக, வரி விகி­தம், தொழி­லா­ளர் சட்­டம், சரக்கு போக்­கு­வ­ரத்து ஆகி­ய­வற்­றில் உள்ள பிரச்­னை­க­ளுக்கு, விரைந்து தீர்வு காண வேண்­டும்.ஆடை­களை போல, அதி­க­ மான தொழி­லா­ளர்­களை கொண்ட, தோல் மற்­றும் கால­ணி­கள் ஏற்­று­ம­தி­யி­லும், சீனா பின்­தங்கி உள்­ளது.வங்­க­தே­சம், வியட்­நாம் போன்ற போட்டி நாடு­கள், சீனா­வின் ஏற்­று­ம­தி­யில் ஏற்­பட்­டுள்ள வெற்­றி­டத்தை நிரப்ப முயல்­கின்றன. இந்­நா­டு­கள், வரி விலக்கு வச­தி­யு­டன், அமெ­ரிக்கா மற்­றும் ஐரோப்­பிய நாடு­க­ளுக்கு ஆடை­களை ஏற்­று­மதி செய்­கின்றன.இந்த போட்­டியை சமா­ளிக்க, மத்­திய அரசு நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்.குறிப்­பாக, பருத்­தியை விட, நைலான் துணி­க­ளுக்கு விதித்­துள்ள அதிக வரி, கடு­மை­யான தொழி­லா­ளர் சட்­டங்­கள் மற்­றும் சரக்கு போக்­கு­வ­ரத்து செலவு போன்ற சவால்­க­ளுக்கு தீர்வு காண வேண்­டும்.தோல் மற்­றும் தோல் சாராத கால­ணி­கள் ஏற்­று­ம­தி­யில், இதர நாடு­களை விட, இந்­தி­யா­வில் வரி அதி­க­மாக உள்­ளது. எனி­னும், தோல் துறைக்கு அரசு அறி­வித்­துள்ள சிறப்பு சலுகை திட்­டங்­கள், இத்­து­றை­யின் வளர்ச்­சிக்கு துணை புரி­யும்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement