Advertisement

‘கோல்டு ஆப்ஷன் கான்ட்ராக்ட்’ எம்.சி.எக்ஸ்., விரைவில் அறிமுகம்

புதுடில்லி : எம்.சி.எக்ஸ்., எனப்­படும், மல்டி கமா­டிட்டி எக்­சேஞ்ச் நிறு­வ­னம், செப்­டம்­ப­ரில், ‘கோல்டு ஆப்­ஷன் கான்ட்­ராக்ட்’ வர்த்­த­கத்தை அறி­மு­கப்­ப­டுத்த திட்­ட­மிட்டு உள்­ளது.‘இந்­தி­யா­வில், முதன்­மு­றை­யாக, இத்­த­கைய வர்த்­தக நடை­முறை அறி­மு­க­மாக உள்­ளது’ என, எம்.சி.எக்ஸ்., நிறு­வ­னத்­தின் நிர்­வாக இயக்­கு­னர், முர்­கங்க் பரஞ்­சபி தெரி­வித்து உள்­ளார்.அவர் மேலும் கூறி­ய­தா­வது:எம்.சி.எக்ஸ்., முன்­பேர சந்­தை­யில், தங்­கம் மீது, ‘ஆப்­ஷன்’ பிரி­வின் கீழ், முதன்­மு­த­லாக, வர்த்­த­கம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட உள்­ளது. இதற்கு, பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான, ‘செபி’ அனு­மதி அளித்­துள்­ளது. புதிய வர்த்­த­கத்­திற்­கான சோதனை முன்­னோட்­டம், ஏற்­க­னவே வெற்­றி­க­ர­மாக நடத்­தப்­பட்டு உள்­ளது.இந்த வர்த்­தக வாய்ப்பை, சந்­தை­யா­ளர்­கள் நீண்ட கால­மாக எதிர்­பார்த்­தி­ருந்­த­னர். இந்த புதிய வசதி, சிறிய நகை கடை­கா­ரர்­க­ளுக்கு ஒரு வரப்­பி­ர­சா­த­மா­கும். இதன் மூலம், அவர்­கள், அன்­றா­டம் தங்­கம் விலை­யில் ஏற்­படும் ஏற்ற, இறக்­கத்தை பற்றி கவ­லை­யின்றி, வர்த்­த­கம் புரி­வர்.இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement