Advertisement

ஜி.எஸ்.டி., கேள்­வி­கள் ஆயி­ரம்

சார், நான், மிதி­வண்­டி­க­ளுக்­கான உதிரி பாகங்­களை வாங்கி, விற்­பனை செய்து வரு­கி­றேன். இதற்கு, எத்­தனை சத­வீ­தம் வரி விதிக்க வேண்­டும்? 12 சத­வீ­தமா அல்­லது 28 சத­வீ­தமா?– விவேக், நாகப்­பட்­டி­னம்மோட்­டார் பொருத்­தப்­ப­டாத மிதி­வண்­டி­யின் உதிரி பாகங்­க­ளுக்கு, 12 சத­வீ­தம், ஜி.எஸ்.டி.,யும், அதுவே, மோட்­டார் பொருத்­தப்­பட்ட மிதி­வண்டி என்­றால், அதன் உதிரி பாகங்­க­ளுக்கு, 28 சத­வீ­தம், ஜி.எஸ்.டி.,யும் விதிக்­கப்­படும்.
ஐயா, நான், ‘வாட்’ வரி ஆலோ­ச­க­ராக உள்­ளேன். என் வாடிக்­கை­யா­ளர், அவ­ரது பெய­ரில் மொத்த வணி­கத்­தில் ஈடு­பட்­டுள்­ளார். மேலும், அவர் தன் பெய­ரில், வணிக வளா­கம் அமைத்து, இடத்தை வாட­கைக்­கும் விட்­டுள்­ளார். அவ­ரது மொத்த வரு­மா­னம், ஆண்­டிற்கு, 50 லட்­சம் ரூபாய் வரை இருக்­கும். தற்­போது, அவ­ரால் இணைப்பு வரி நிலையை தேர்வு செய்ய முடி­யுமா?– ரங்­க­ரா­ஜன், மதுரை
நீங்­கள் மேற்­கூ­றிய பதிவு செய்த நபர், வணி­கத்­தில் மட்­டும் ஈடு­பட்­டு­இருந்­தால், அவ­ரால் இணைப்பு வரியை தேர்ந்­தெ­டுக்க முடி­யும். ஆனால், அவர் இடத்தை வாட­கைக்கு விடும் சேவை­யி­லும் ஈடு­பட்­டி­ருப்­ப­தால், அவ­ரால் இணைப்பு வரி நிலையை தேர்வு செய்ய இய­லாது. அவர் சாதா­ரண முறை­யில், ஜி.எஸ்.டி., வசூ­லித்து அர­சுக்கு செலுத்த வேண்­டும்.
ஜி.எஸ்.டி., அறி­மு­கத்­திற்கு முன், வரி விலைப் பட்­டி­ய­லில் இருந்த சேவை வரி செலுத்­தாத கார­ணத்­தால், அதற்­கான உள்­ளீட்டு வரி பயனை, நாங்­கள் பெற­வில்லை. தற்­போது, ஜி.எஸ்.டி., வந்த பின், அத்­த­கைய தொகையை செலுத்­தும் போது, சேவை வரிக்­கான உள்­ளீட்டு வரி பயனை, ஜி.எஸ்.டி., பய­னாக பெற இய­லுமா?– மதி­ய­ழ­கன், சிவ­கங்கை
ஆம். பெற இய­லும். நீங்­கள் குறிப்­பிட்ட சேவை வரியை, செப்., 30க்குள் செலுத்­தும்­பட்­சத்­தில்​,​ நீங்­கள் செலுத்­திய சேவை வரியை, சி.ஜி.எஸ்.டி., உள்­ளீட்டு வரி பய­னாக பெற­லாம்.
ஜி.எஸ்.டி., வருவ­தற்கு முன் இருந்த, ‘வாட்’ வரி­யின் உள்­ளீட்டு வரி பயன் தொகை மற்­றும் சேவை வரி­யின் உள்­ளீட்டு வரி பயன் தொகை ஆகி­யவை, ‘மைக்­ரே­ஷன்’ செய்த கார­ணத்­தால், எங்­க­ளது, ஜி.எஸ்.டி., மின்­னணு போர்ட்­ட­லில் தானாக வந்து விடுமா அல்­லது ஜி.எஸ்.டி., டிரான் – 1 படி­வம் தாக்­கல் செய்­தால் மட்­டுமே வருமா?– வர­த­ரா­ஜன், பெங்­க­ளூருநீங்­கள், ஜி.எஸ்.டி., டிரான் – 1 படி­வம் தாக்­கல் செய்­தால் மட்­டுமே, முன்­பி­ருந்த வரி­களின் உள்­ளீட்டு வரி பயன் தொகை கிடைக்க பெறும்.
வங்­கி­கள் மற்­றும் நிதி நிறு­வ­னங்­கள், ‘ரிவெர்ஸ் சார்ஜ்’ முறை­யில் வரி செலுத்­தி­னால், அவர்­க­ளுக்கு அப்­படி செலுத்­திய வரித் தொகை முழு­மை­யாக உள்­ளீட்டு வரி பய­னாக கிடைக்­குமா?– நடேஷ், திரு­வான்­மி­யூர்பொது­வாக, வங்­கி­கள் மற்­றும் நிதி நிறு­வ­னங்­க­ளுக்கு செலுத்­திய வரி­யில், 50 சத­வீ­தம் மட்­டுமே, உள்­ளீட்டு வரி பய­னாக கிடைக்­கும். அவர்­கள், ‘ரிவெர்ஸ் சார்ஜ்’ முறை­யில் செலுத்­திய வரிக்­கும், 50 சத­வீ­தம் மட்­டுமே உள்­ளீட்டு வரி பய­னாக கிடைக்­கும்.
ஒரு­வர் வரி விதிக்­கக்­கூ­டிய சேவை­யும், வரி இல்­லாத சேவை­யும் வழங்­கி­னால், அவர்­கள் முழு­மை­யாக உள்­ளீட்டு வரி பயன் பெறு­வ­தற்கு, எந்த வகை­யில் முன்­னேற்­பாடு செய்ய வேண்­டும்?– கிஷோர், புதுச்­சேரிவரி விதிக்­கக்­கூ­டிய மற்­றும் வரி­யி­லி­ருந்து விலக்கு அளிக்­கப்­பட்ட வழங்­கல்­களை வழங்­கும் வழங்­கு­னர், இரண்­டிற்­கும் தனித்­த­னி­யாக, வரவு – செலவு புத்­த­கம் வைத்­தி­ருக்க வேண்­டும். அப்­ப­டிச் செய்­தால், வரி விதிக்­கக்­கூ­டிய சேவை­யின் உள்­ளீட்டு வரி பயனை, முழு­மை­யாக பெற­லாம்.
நாங்­கள், எங்­கள் வேலை பணி­யா­ள­ருக்கு, மூல­தன சரக்­கான இயந்­தி­ரங்­க­ளை­யும், அதைச் சார்ந்த உதிரி பாகங்­க­ளை­யும் அளிக்­கி­றோம். இத­னால், எங்­க­ளு­டைய உற்­பத்தி அதி­க­ரிக்­கிறது. அவ்­வாறு, எங்­க­ளு­டைய மூல­தன இயந்­தி­ரங்­களை அளித்­தால், எங்­க­ளுக்கு உள்­ளீட்டு வரி பயன் உண்டா?– முத்­து­ரா­மன், திருச்சிநீங்­கள், உங்­க­ளு­டைய மூல­தன இயந்­தி­ரங்­களை, வேலை பணி­யா­ள­ருக்கு அளித்­தா­லும், உங்­க­ளுக்கு, அதற்­கான உள்­ளீட்டு வரி பயன் முழு­மை­யாக உண்டு. நீங்­கள், அத்­த­கைய மூல­தன இயந்­தி­ரங்­களை, வேலை பணி­யா­ள­ருக்கு அனுப்­பிய தேதி­யி­லி­ருந்து, 3 ஆண்­டு­க­ளுக்­குள் திரும்ப பெற வேண்­டும் என்ற நிபந்­த­னை­யும் உள்­ளது.
நாங்­கள், எங்­க­ளு­டைய தொழிற்­சா­லையை விரி­வாக்­கம் செய்ய உள்­ளோம். அதில், புதி­தாக செயல் அலு­வ­ல­கம் கட்ட உள்­ளோம். அதற்கு, உள்­ளீட்டு வரி பயன் உண்டா?– ரவிச்­சந்­தர், பூவி­ருந்­த­வல்லிஅசையா சொத்­தான, செயல் அலு­வ­லக கட்­ட­டங்­கள் கட்­டும் போது, செலுத்­திய வரியை உள்­ளீட்டு வரி பய­னாக பெற இய­லாது. இதுவே, உங்­கள் தொழிற்­சா­லை­யில், தொழிற்­கூ­டங்­கள் கட்­டி­னால், அதற்கு செலுத்­திய வரியை, 100 சத­வீ­தம் உள்­ளீட்டு வரி பய­னாக பெற­லாம்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement