Advertisement

பங்குச்சந்தைகளில் தொடர் சரிவு : 4 நாட்களில் ரூ.6.4 லட்சம் கோடி இழப்பு

மும்பை : பங்குச்சந்தையில் கடந்த 4 வர்த்தக நாட்களில், முதலீட்டாளர்கள் 6.4 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பை சந்தித்துள்ளனர்.
மும்பை பங்குச்சந்தையின் மொத்த சந்தை மூலதன மதிப்பு ஜூலை 6ஆம் தேதி 133 லட்சம் கோடியாக இருந்தது. இது, 23 வர்த்தக நாட்களில் படிப்படியாக உயர்ந்து ஆகஸ்ட் 7ஆம் தேதி 139.5 லட்சம் கோடியாக உயர்ந்தது. இந்நிலையில், டோக்லம் பீடபூமியில் இந்தியா-சீனா இடையே ஏற்பட்டுள்ள மோதல் போக்கு, பெயரளவுக்கான 331 நிறுவனங்கள் வர்த்தகத்தில் ஈடுபட செபி விதித்த தடை, கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாயில் ஏற்பட்ட சரிவு, சர்வதேச அளவில் அமெரிக்கா-வடகொரியா இடையேயான மோதல் போக்கு என பல்வேறு காரணங்களால், கடந்த வாரத்தில் இந்திய பங்குச்சந்தைகளில் சரிவு ஏற்பட்டது.
கடந்த ஒரு வாரத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் ஆயிரத்து 100 புள்ளிகளை இழந்தது. இதனால் 4 வர்த்தக நாட்களில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் 6.4 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பை சந்தித்துள்ளனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • Ram Prakash - Coimbatore,இந்தியா

    6.4 லட்சம் கோடி ரூபாய் இழப்பு என்று மொட்டையா சொன்னா எப்படி? யார் இழந்தா? யார் பெற்றார் ? என விவரமா சொல்லுங்க. ஒருத்தருக்கு நஷ்டம் என்றால் அது வேறு ஒருவருக்கு லாபம் தானே. அது தானே பங்குச்சந்தை.என்கிற சூதாட்டம்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement