Advertisement

எஸ்.எம்.இ., பிரிவில் சாதனை ரூ.660 கோடி திரட்டப்பட்டது

புதுடில்லி: இந்­தாண்டு, ஜன., – ஜூன் வரை, மும்பை மற்­றும் தேசிய பங்­குச் சந்­தை­களில், எஸ்.எம்.இ., எனப்­படும், சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள் பிரி­வில், 50 நிறு­வ­னங்­கள் புதிய பங்கு வெளி­யீ­டு­கள் மூலம், 660 கோடி ரூபாய் திரட்­டின. இது, 2016ல், இதே காலத்­தில், 27 நிறு­வ­னங்­கள் புதிய பங்கு வெளி­யீ­டு­கள் மூலம் திரட்­டிய, 211 கோடி ரூபாயை விட, மூன்று மடங்கு அதி­கம்; முழு ஆண்­டில், 66 நிறு­வ­னங்­கள், 540 கோடி ரூபாய் திரட்டி உள்ளன.

இது குறித்து, பன்­ட­மோத் குழு­மத்­தின் நிர்­வாக இயக்­கு­னர் மகா­வீர் லுனா­வத் கூறி­ய­தா­வது: சிறப்­பான நிர்­வா­கம், நிறு­வ­னங்­களின் கடன் தகுதி மதிப்­பீடு உயர்வு போன்­றவை கார­ண­மாக, சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­களின் பங்கு வெளி­யீ­டு­கள், முத­லீ­டு­களை அதி­கம் ஈர்த்து வெற்றி பெற்­றுள்ளன. தற்­போது, நிதி நிறு­வ­னங்­கள் கூட, சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­களின் பங்­கு­களில் ஆர்­வத்­து­டன் முத­லீடு செய்ய துவங்கி உள்ளன. பங்­கு­களை வெளி­யிட்ட நிறு­வ­னங்­களில், பெரும்­பா­லா­னவை, முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு நல்ல வரு­வாயை அளித்­துள்ளன. இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement