Advertisement

அமெரிக்க கச்சா எண்ணெய் பாரத் பெட்ரோலியம் இறக்குமதி

புதுடில்லி : பொதுத் துறை­யைச் சேர்ந்த, பாரத் பெட்­ரோ­லி­யம் கார்ப்­ப­ரே­ஷன் நிறு­வ­னம், முதன்­மு­றை­யாக, அமெ­ரிக்­கா­வில் இருந்து, அதிக கந்­தக தன்மை உள்ள, ‘மார்ஸ் – பொசை­டான்’ என்ற கச்சா எண்­ணெய் வகை­களை இறக்­கு­மதி செய்­கிறது.

‘‘இவை இரண்­டி­லும், தலா, 5 லட்­சம் பீப்­பாய் கச்சா எண்­ணெய், செப்., 26 – அக்., 10 வரை இறக்­கு­மதி செய்­யப்­படும்,’’ என, பாரத் பெட்­ரோ­லி­யம் நிறு­வ­னத்­தின் சுத்­தி­க­ரிப்பு பிரி­வின் தலை­வர், ஆர்.ராமச்­சந்­தி­ரன் தெரி­வித்து உள்­ளார்.

இம்­மாத துவக்­கத்­தில், பொதுத் துறை­யைச் சேர்ந்த, இந்­தி­யன் ஆயில் கார்ப்­ப­ரே­ஷன் நிறு­வ­னம், அமெ­ரிக்­கா­வில் இருந்து, 16 லட்­சம் பீப்­பாய், ‘மார்ஸ்’ கச்சா எண்­ணெயை முதன்­மு­த­லாக இறக்­கு­மதி செய்­தது குறிப்­பி­டத்­தக்­கது. சமீ­பத்­தில், பிர­த­மர் மோடி உட­னான சந்­திப்­பின் போது, அமெ­ரிக்க அதி­பர் டொனால்டு டிரம்ப், கச்சா எண்­ணெய் இறக்­கு­ம­தி­யில், உல­க­ள­வில் மூன்­றா­வது இடத்­தில் உள்ள இந்­தி­யா­வுக்கு, அதி­க­ள­வில் எரி­சக்தி பொருட்­களை ஏற்­று­மதி செய்ய ஆர்­வ­மாக உள்­ள­தாக தெரி­வித்­தி­ருந்­தார்.

இதை­ய­டுத்து, பொதுத் துறை எண்­ணெய் நிறு­வ­னங்­கள், அமெ­ரிக்­கா­வில் இருந்து, குறைந்த விலை­யுள்ள கச்சா எண்­ணெயை இறக்­கு­மதி செய்ய துவங்கி உள்ளன.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement