Advertisement

ஜி.எஸ்.டி., கேள்விகள் ஆயிரம்

ஜி.எஸ்.டி.,யை உரிய தவணை தினத்­தில் செலுத்த தவ­றி­னால், எத்­தனை சத­வீத வட்டி செலுத்த வேண்­டும்?– ரங்­க­நா­தன், திருத்­தணிஜி.எஸ்.டி., சட்­டத்­தின்­படி, செலுத்த வேண்­டிய தொகையை, தவணை தினத்­தில் கட்ட தவ­றி­னால், 18 சத­வீத வட்­டியை, தொகை­யு­டன் சேர்த்து செலுத்த வேண்­டும்.
நாங்­கள், கடல் சரக்கு கட்­ட­ணம் வசூ­லிக்­கும் போது, ஜி.எஸ்.டி., எத்­தனை சத­வீ­தம் வசூ­லிக்க வேண்­டும்?– முத்­த­ழகு, துாத்துக்­குடிகடல் சரக்கு கட்­ட­ணத்­திற்கு, ஜி.எஸ்.டி., 5 சத­வீ­தம் வசூ­லிக்க வேண்­டும். அதை சார்ந்த இதர சேவை­க­ளுக்கு, 18 சத­வீ­தம் வரி வசூ­லிக்க வேண்­டும்.
நாங்­கள், முன்­னணி இரு­சக்­கர வாக­னங்­க­ளுக்­கான, ‘சர்­வீஸ் சென்­டர்’ வைத்­துள்­ளோம். எங்­க­ளது அனைத்து சர்­வீஸ் வேலை­க­ளி­லும், பொருட்­கள் மற்­றும் சேவை கலந்து இருக்­கும். நாங்­கள், கலவை வரி திட்­டத்தை தேர்வு செய்­தால், எத்­தனை சத­வீ­தம் வரி வசூல் செய்ய வேண்­டும்?– பிரபு, திண்­டுக்­கல்உங்­க­ளது சர்­வீஸ் தொழி­லா­னது, ஜி.எஸ்.டி., சட்­டத்­தின்­படி சேவை­யாக கரு­தப்­படும். சேவை வழங்­கு­த­லில் ஈடு­படும் நபர், கலவை வரி திட்­டத்தை தேர்வு செய்ய இய­லாது. எனவே, உங்­க­ளால் கலவை வரி திட்­டத்­தின் கீழ், சலுகை நிலை­யில் வரி வசூல் செய்ய இய­லாது.
மாநில அர­சால் விதிக்­கக்­கூ­டிய, எஸ்.ஜி.எஸ்.டி.,யின் சத­வீ­தத்தை, மாநில அர­சால் கூட்­டவோ அல்­லது குறைக்­கவோ முடி­யுமா?– நம்­பி­நா­ய­கம், ராஜ­பா­ளை­யம்மாநில அர­சால் தன்­னிச்­சை­யாக, எஸ்.ஜி.எஸ்.டி., சத­வீ­தத்தை கூட்­டவோ அல்­லது குறைக்­கவோ முடி­யாது. அவர்­கள், ஜி.எஸ்.டி., கவுன்­சில் என, சொல்­லப்­ப­டக்­கூ­டிய, ஜி.எஸ்.டி., கூட்­ட­மைப்­பிற்கு, தங்­க­ளது பரிந்­து­ரையை கூறி, அதன் மூலம் தான், ஜி.எஸ்.டி., சட்ட விதி­யில், வரி சத­வீ­தத்­திற்­கான மாற்­றத்தை கொண்டு வர இய­லும்.
சார், ஜூன், 30ல், எங்­க­ளி­டத்­தில், ‘வாட்’ உள்­ளீட்டு பயன் ஒரு லட்­சம் ரூபாய் உள்­ளது. அதற்­கான கையி­ருப்பு சரக்கு ஓராண்­டுக்­குள் வாங்­கி­யி­ருக்க வேண்­டுமா? ஓராண்­டுக்கு முன் வாங்­கிய பொருட்­க­ளுக்­கும், உள்­ளீட்டு பயன் உள்­ளதா?– ரஷீத், திட்டைநீங்­கள், ‘வாட்’ ரிட்­டர்­னில் தெரி­வித்த அனைத்து உள்­ளீட்டு வரி பய­னும், ஜி.எஸ்.டி., சட்­டத்­தின்­படி உள்­ளது. அத்­த­கைய உள்­ளீட்டு பொருட்­கள், ஓராண்­டுக்­குள் வாங்­கி­யி­ருக்க வேண்­டும் என்ற அவ­சி­ய­மில்லை.
சார், நாங்­கள், ‘ஜாப் ஒர்க்’ செய்­யும் இடத்­திற்கு, பொருட்­களை கொள்­மு­தல் செய்­யும் இடத்­தி­லி­ருந்து நேர­டி­யாக அனுப்­பி­னால், முதன்மை உற்­பத்­தி­யா­ளர் உள்­ளீட்டு வரி பயன் பெற முடி­யுமா?– கமல், ஓசூர்ஆம். ஜி.எஸ்.டி., சட்­டத்­தில், இதற்­கென தனி விதி உள்­ளது. முதன்மை உற்­பத்­தி­யா­ளர் நேர­டி­யாக பொருட்­களை கொள்­மு­தல் செய்து அனுப்­பா­வி­டி­னும், அவ­ருக்கு உள்­ளீட்டு வரி பயன் உள்­ளது.
நாங்­கள், சி.டி., ஸ்கேன் மற்­றும் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் செய்­யும் பரி­சோ­தனை மையத்தை நடத்தி வரு­கி­றோம். நாங்­கள் எத்­தனை சத­வீ­தம், ஜி.எஸ்.டி., வசூல் செய்ய வேண்­டும்?– ராணி, சென்னைஇத்­த­கைய சேவை, மருத்­து­வம் சார்ந்த சேவை­யா­கும். எனவே, இதற்கு, ஜி.எஸ்.டி., வசூல் செய்ய விலக்கு அளிக்­கப்­பட்டு உள்­ளது.
ஒரு நாளைக்கு, 5,000 ரூபாய் வரை, பதிவு செய்­யப்­ப­டாத நபர்­க­ளுக்கு பணம் செலுத்­தி­னால், ‘ரிவெர்ஸ் சார்ஜ்’ முறை­யில் வரி விதிப்பு இருக்­காது என, ‘தின­ம­லர்’ நாளி­த­ழில் கூறி­யி­ருந்­தீர்­கள். இது, ரொக்­கப் பரி­மாற்­றத்­திற்கு மட்­டும் பொருந்­துமா அல்­லது வங்கி மூலம் காசோ­லை­யா­கவோ அல்­லது ஆன்­லைன் பரி­வர்த்­தனை மூல­மா­கவோ செலுத்­தி­னால், அதற்­கும் பொருந்­துமா?– மாத­வன், கட­லுார்பதிவு செய்­யப்­பட்ட நபர், பதிவு செய்­யப்­ப­டாத நபர்­க­ளு­டன் செய்­யும் பரி­வர்த்­தனை, மொத்­த­மாக ஒரு நாளைக்கு, 5,000 ரூபாய் வரை, ‘ரிவெர்ஸ் சார்ஜ்’ முறை­யில் செலுத்­தும் வரிக்கு விலக்கு அளிக்­கப்­பட்டு உள்­ளது. ரொக்­கப் பரி­வர்த்­தனை, ஆன்­லைன் பரி­வர்த்­தனை மற்­றும் காசோலை பரி­வர்த்­தனை அனைத்­திற்­கும், இந்த முறை பொருந்­தும்.

-ஜி.சேகர், எப்.சி.ஏ., ஆடிட்டர்

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement