Advertisement

மூக்கு கண்ணாடி கடைகளுக்கு கடிவாளம் போட அரசு முடிவு

புதுடில்லி : மூக்கு கண்­ணாடி கடை­களின் செயல்­பா­டு­களை ஒழுங்­கு­ப­டுத்த, மத்­திய அரசு, புதிய விதி­மு­றை­களை உரு­வாக்­கும் பணி­யில் ஈடு­பட்­டுள்­ளது.இதற்­காக, மத்­திய சுகா­தார அமைச்­ச­கம், தனி குழுவை அமைத்­துள்­ளது. இக்­குழு, மூக்கு கண்­ணாடி விற்­பனை, கண் பரி­சோ­தனை சேவை­யு­டன் மூக்கு கண்­ணா­டியை விற்­போர், மூக்கு கண்­ணாடி தயா­ரிப்­போர் ஆகி­யோ­ருக்­கான விதி­மு­றை­களை உரு­வாக்­கும்.தற்­போது, மூக்கு கண்­ணாடி கடை­கள், வணிக நிறு­வ­னங்­கள் சட்­டத்­தின் கீழ் உள்­ள­தால், அவற்­றின் தரம், வழங்­கும் சேவை உள்­ளிட்­டவை குறித்து ஆய்வு செய்ய முடி­யாத நிலை உள்­ளது. இனி, அவை, சுகா­தார ஒழுங்­கு­முறை சட்­டத்­தின் கீழ் கொண்டு வரப்­படும்.இது குறித்து, டில்லி எய்ம்ஸ் மருத்­து­வ­ம­னை­யின் ஆர்.பி., கண் சிகிச்சை மையத்­தின் தலைமை மருத்­து­வர் அதுல் குமார் கூறி­ய­தா­வது:கண் மருத்­து­வர்­கள், மருத்­து­வ­ம­னை­களில் கண் பரி­சோ­தனை, மருந்­து­களை பரிந்­து­ரைப்­பது, கண் அறுவை சிகிச்சை செய்­வது உள்­ளிட்ட பணி­களில் ஈடு­ப­டு­கின்­ற­னர்.பிளஸ் 2 முடித்­த­வர்­கள், மூன்­றாண்டு கண் பரி­சோ­தனை கல்வி பயின்று, கண் பரி­சோ­தனை பணியை மேற்­கொள்­கின்­ற­னர். இத்­த­கை­யோரை பணிக்கு அமர்த்தி, அவர்­களின் பரிந்­து­ரைப்­படி, மூக்கு கண்­ணா­டி­களை, கடைக்­கா­ரர்­கள் விற்­கின்­ற­னர்.ஆனால், பல கடை­கள், கண் பரி­சோ­த­கர்­கள் இல்­லா­ம­லும், போதிய சாத­னங்­கள் இல்­லா­ம­லும் செயல்­ப­டு­கின்றன.சாதா­ரண நபர்­கள், கண் பரி­சோ­தனை செய்து பரிந்­து­ரைக்­கும் கண்­ணா­டி­யால், பலர் பாதிக்­கப்­ப­டு­கின்­ற­னர்.இதை தடுக்க, மூக்கு கண்­ணாடி கடை­கள் மற்­றும் அங்கு பணி­யாற்­றும் கண் பரி­சோ­த­கர்­கள், கண்­ணா­டி­கள் தயா­ரிப்­போரை, ஒழுங்­கு­முறை சட்­டத்­தின் கீழ் கொண்­டு­வர முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது.இதன் மூலம், தவ­றான பரிந்­து­ரை­யால் மூக்கு கண்­ணாடி அணிந்து, பல்­வேறு பாதிப்­பு­க­ளுக்கு மக்­கள் ஆளா­வது குறை­யும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement