Advertisement

‘ஸ்டார்ட் அப்’ நிதி சூழல் மேம்­ப­டு­கி­றது

ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்கள் நிதி திரட்டும் சூழல் மேம்­பட்­டு உள்­ள­தாக புள்­ளி­ வி­ப­ரங்கள் தெரி­விக்­கின்­றன.

ஸ்டார்ட் அப் எனப்­படும் புது­யுக நிறு­வ­னங்கள் தங்கள் வளர்ச்­சிக்கு தேவை­யான நிதி திரட்­டு­வதில் கடந்த ஆண்டு சிக்­க­லான சூழல் நில­வி­யது. இந்­நி­லையில் தற்­போது இந்­நிலை மேம்­பட்­டு உள்­ள­தாக தெரிய வந்­துள்­ளது.இந்த ஆண்டின் ஏப்ரல் முதல் மே மாதம் வரை­யான காலத்தில் ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்கள், 138 ஒப்­பந்­தங்கள் மூலம், 538 மில்­லியன் டாலர் திரட்­டி­யுள்­ளன. இதே காலத்தில் கடந்த ஆண்டு, 565 மில்­லியன் டாலர் திரட்­டப்­பட்­டது. 2014ம் ஆண்டில் இதே காலத்தில், 536 மில்­லியன் டாலர் நிதி திரட்­டப்­பட்­டது.

ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­களுக்கு, மிகச்­சி­றந்த ஆண்­டாக, 2015 அமைந்­தது. அந்த ஆண்டு, 173 ஒப்­பந்­தங்கள் மூலம், 703 மில்­லியன் டாலர் திரட்­டப்­பட்­ட­தாக, ‘வென்ச்சர் இன்­ட­லிஜன்ஸ்’ நிறு­வனம் தெரி­வித்­து உள்­ளது. ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்கள், நிதி திரட்­டு­வதில் நிலவி வந்த சிக்கல் தற்­போது மேம்­பட்­டி­ருப்­ப­தாக இத்­து­றையை சேர்ந்­த­வர்கள் கருத்து தெரி­வித்­துள்­ளனர். இந்த ஆண்டு நிதி திரட்­டு­வதில் வழக்­க­மான ஆண்­டாக அமையும் என்றும் நம்­பிக்கை தெரி­வித்­துள்­ளனர். ஏற்­க­னவே உள்ள முத­லீட்­டா­ளர்கள் ஆத­ரவும் தொடர்­வ­தாக தெரி­விக்­கின்­றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement