Advertisement

‘புற­வ­ழி­யில் இறக்­கு­ம­தி­யா­கும் உருக்கு பொருட்­களை அனு­மதிக்க மாட்­டோம்’

புவனேஷ்வர் : ‘‘சீன உருக்கு பொருட்­கள் சில­வற்­றுக்கு தடை விதித்­துள்ள நிலை­யில், அவை பாத்­தி­ரங்­கள் அல்­லது முழு­மை­யான தயா­ரிப்­பு­க­ளாக இறக்­கு­ம­தி­யா­கின்­ற­னவா என்­பதை, மத்­திய அரசு தீவி­ர­மாக கண்­கா­ணித்து வரு­கிறது. அத்­த­கைய இறக்­கு­ம­தியை, ஒரு­போ­தும் அனு­ம­திக்க முடி­யாது,’’ என, மத்­திய உருக்கு துறை அமைச்­சர் சவுத்ரி பிரேந்­தர் சிங் உறு­திப்­பட தெரி­வித்து உள்­ளார்.ஒடி­சா­வில், அவர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­ய­தா­வது:மலிவு விலை உருக்கு பொருட்­கள் இறக்­கு­ம­தி­யால், உள்­நாட்டு நிறு­வ­னங்­கள் பாதிக்­கப்­ப­டு­வதை தடுக்க, மத்­திய அரசு பல்­வேறு நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்­ளது. இதன்­படி, சீனா­வில் இருந்து, ஒரு­சில உருக்கு பொருட்­களை இறக்­கு­மதி செய்ய, தடை விதிக்­கப்­பட்டு உள்­ளது.ரத்துஅத்­து­டன், உருக்கு பொருட்­க­ளுக்­கான, குறைந்­த­பட்ச இறக்­கு­மதி விலை நிர்­ணய திட்­ட­மும் ரத்து செய்­யப்­பட்டு உள்­ளது. அது­மட்­டு­மின்றி, பெரும்­பான்மை உருக்கு பொருட்­கள் இறக்­கு­ம­திக்கு, பொருள் குவிப்பு தடுப்பு வரி­யும் விதிக்­கப்­பட்டு உள்­ளது. இத்­த­கைய நட­வ­டிக்­கை­க­ளால், இந்­தி­யா­வின் உருக்கு இறக்­கு­மதி, 2016 – 17ம் நிதி­யாண்­டில், 37 சத­வீ­தம் குறைந்­துள்­ளது.இருந்த போதி­லும், இன்­னும் சில உருக்கு பொருட்­கள், பாத்­தி­ரங்­கள் அல்­லது முழு­மை­யாக தயா­ரிக்­கப்­பட்ட பொருட்­கள் என்ற பெய­ரில், புற­வ­ழி­யாக நுழைந்து கொண்­டி­ருக்­கின்றன. அவற்றை தீவி­ர­மாக கண்­கா­ணித்து வரு­கி­றோம். அத்­த­கைய வர்த்­த­கத்தை, ஒரு­போ­தும் ஏற்­றுக் கொள்ள முடி­யாது.நாட்­டின் உருக்கு துறை, ஆண்­டுக்கு, 7 சத­வீத சரா­சரி வளர்ச்­சியை கண்டு வரு­கிறது. கடந்த நிதி­யாண்­டில், உருக்கு ஏற்­று­மதி, 102 சத­வீ­தம் உயர்ந்து, 40 லட்­சம் டன்­னில் இருந்து, 82 லட்­சம் டன்­னாக உயர்ந்­துள்­ளது.ரூ.40,000 கோடிஎனி­னும், இந்­தி­யா­வில் தனி­ந­பர் உருக்கு பயன்­பாடு, ஆண்­டுக்கு, 64 கிலோ என்ற அள­வில் மிகக் குறை­வாக உள்­ளது. இதை, 2031ல், 160 கிலோ­வாக உயர்த்த இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்டு உள்­ளது.இதற்கு மத்­திய அரசு, அடிப்­படை கட்­ட­மைப்பு துறைக்கு ஒதுக்­கீடு செய்ய உள்ள, 4 லட்­சம் கோடி ரூபாய் மதிப்­பி­லான சாலை, ரயில், துறை­மு­கம் உள்­ளிட்ட கட்­டு­மான திட்­டங்­கள் துணை புரி­யும். இவற்­றுக்­கான ஒதுக்­கீட்­டில், 10 சத­வீ­தம் அதா­வது, 40 ஆயி­ரம் கோடி ரூபாய் அள­விற்கு, உருக்கு பொருட்­க­ளுக்கு செல­வி­டப்­படும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது.மத்­திய அர­சின், அனை­வ­ருக்­கும் வீடு திட்­டம், கிரா­மங்­களில் கழிப்­பறை வச­தி­களை ஏற்­ப­டுத்­தும், ‘துாய்மை இந்­தியா’ திட்­டம் ஆகி­யவை, உருக்கு பொருட்­க­ளுக்­கான தேவையை அதி­க­ரிக்க துணை புரி­யும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.
மீண்டும் வளர்ச்சிகடந்த இரு ஆண்­டு­க­ளாக, உருக்கு துறை கடு­மை­யான சோத­னை­களை சந்­தித்து வந்­தது. அதி­லி­ருந்து, 6 – 8 மாதங்­க­ளாக விடு­பட்டு, தற்­போது வளர்ச்­சிப் பாதை­யில் நடை­போட்டு வரு­கிறது. இதை­ய­டுத்து, இத்­து­றை­யின் வேலை­வாய்ப்­பில் காணப்­பட்ட சுணக்க நிலை­யும் நீங்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.சவுத்ரி பிரேந்­தர் சிங் மத்­திய உருக்கு துறை அமைச்­சர்

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • Manian - Chennai,இந்தியா

    The best way to defeat China is to follow it's own medicine. Get samples of every thing and just copy them locally and sell them for a low price with government help. Tax imports by 200% and if it is sold to rich people, collect additional 500% user tax from them. Patriotism is tied to monetary benefits. Sales of import will vanish. But bribe taking official will India to China soon. That is why China is not invading India. Once they take over, all these rascals will be ed along with their family.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement