Advertisement

‘டெக்ஸ்டைல்ஸ் இந்தியா’ கண்காட்சி 60 நாடுகளின் நிறுவனங்கள் பங்கேற்பு

திருவனந்தபுரம் : குஜ­ராத்­தில் நடக்க உள்ள, ‘டெக்ஸ்­டைல்ஸ் இந்­தியா’ கண்­காட்­சி­யில், 60 நாடு­க­ளைச் சேர்ந்த நிறு­வ­னங்­கள் பங்­கேற்க உள்ளன.இது குறித்து, மத்­திய ஜவு­ளித் துறை இணை­ய­மைச்­சர் அஜய் தாம்தா கூறி­ய­தா­வது:இந்­தி­யா­வில், ஜவு­ளித் துறையை ஊக்­கு­விக்க, மத்­திய அரசு பல நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கிறது. அதன் ஒரு பகு­தி­யாக, குஜ­ராத்­தில் உள்ள காந்தி நக­ரில், ஜூன் 30 – ஜூலை 2 வரை, டெக்ஸ்­டைல்ஸ் இந்­தியா என்ற பெய­ரில், சர்­வ­தேச ஜவுளி கண்­காட்சி நடக்க உள்­ளது. இதை, அசாம், ஆந்­திரா, தெலுங்­கானா, மஹா­ராஷ்­டிரா ஆகிய மாநி­லங்­கள் இணைந்து நடத்த உள்ளன.கண்­காட்­சி­யில், அமெ­ரிக்கா, இங்­கி­லாந்து, ஜெர்­மனி, பிரான்ஸ் உள்­ளிட்ட, 60 நாடு­க­ளைச் சேர்ந்த, 2,500க்கும் மேற்­பட்ட முத­லீட்­டா­ளர்­கள் பங்­கேற்க உள்­ள­னர். பல மாநில ஜவு­ளித் துறை­யி­ன­ரும் பங்­கேற்­பர்.இதன் மூலம், இந்­தி­யா­வில் இருந்து, ஜவுளி மற்­றும் கைவினை பொருட்­களின் ஏற்­று­மதி அதி­க­ரிக்­கும். சர்­வ­தேச நிறு­வ­னங்­கள், இந்­தி­யா­வில், ஜவுளி தொழி­லில் அதி­க­ள­வில் முத­லீடு செய்­ய­வும் வாய்ப்­புள்­ளது.இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement