Advertisement

வங்கிகளின் வாராக்கடன் ரிசர்வ் வங்கி கணிப்பு

புதுடில்லி : பொதுத் துறை வங்­கி­கள், வாராக்­க­டன் சுமையை சமா­ளிக்க, 70 ஆயி­ரம் கோடி ரூபாய் வழங்­கும் திட்­டத்­தின் கீழ், கடந்த இரு நிதி­யாண்­டு­களில், மத்­திய அரசு, 50 ஆயி­ரம் கோடி ரூபாய் வழங்கி உள்­ளது.இத்­திட்­டத்­தில், ‘நடப்பு, 2017 – 18ம் நிதி­யாண்­டில், பொதுத் துறை வங்­கி­க­ளுக்கு, 10 ஆயி­ரம் கோடி ரூபாய் ஒதுக்­கப்­படும்’ என, சமீ­பத்­தில், மத்­திய நிதி­ய­மைச்­சர் அருண் ஜெட்லி தெரி­வித்­தி­ருந்­தார்.இந்­நி­லை­யில், டில்­லி­யில், ‘அசோ­செம்’ கூட்­டத்­தில், ரிசர்வ் வங்கி துணை கவர்­னர், எஸ்.எஸ்.முந்த்ரா பேசி­ய­தா­வது:இந்­திய வங்­கித் துறை, 8 லட்­சம் கோடி ரூபாய் வாராக்­க­ட­னில் சிக்கி உள்­ளது. இதில், பொதுத் துறை வங்­கி­களின் பங்கு மட்­டும், 6 லட்­சம் கோடி ரூபா­யா­கும். இத்­த­கைய சூழ­லில், நடப்பு நிதி­யாண்­டிற்கு, மத்­திய பட்­ஜெட்­டில் பொதுத் துறை வங்­கி­க­ளுக்கு ஒதுக்­கப்­பட்­டுள்ள, 10 ஆயி­ரம் கோடி ரூபாய் போதாது.வங்­கி­க­ளுக்கு கூடு­த­லாக, 10 ஆயி­ரம் கோடி ரூபாய் தேவைப்­படும். நிதி­ய­மைச்­ச­ருக்­கும் இது புரிந்­தி­ருக்­கும். அத­னால் தான், தேவைப்­பட்­டால் கூடு­தல் நிதி­யா­தா­ரத்­திற்­கான வழி­கள் ஆரா­யப்­படும் என, தெரி­வித்­துள்­ளார்.இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement