Advertisement

‘மின்னணு பொருளாதாரம் 1 லட்சம் கோடி டாலராக உயரணும்’

புதுடில்லி : ‘‘அடுத்த நான்கு ஆண்­டு­களில், இந்­தி­யா­வின் மின்­னணு பொரு­ளா­தா­ரத்தை, 1 லட்­சம் கோடி டால­ராக உயர்த்த, ஐ.டி., துறை­யி­னர் உதவ வேண்­டும்,’’ என, மத்­திய தக­வல் தொழிற்­நுட்­பத் துறை அமைச்­சர் ரவி­சங்­கர் பிர­சாத் கேட்­டுக் கொண்­டுள்­ளார்.அவர், டில்­லி­யில், இந்­தி­யா­வின் மின்­னணு பொரு­ளா­தார வளர்ச்சி கருத்­த­ரங்­கில் பேசி­ய­தா­வது:தக­வல் தொழிற்­நுட்­பம் மற்­றும் தக­வல் தொழிற்­நுட்­பம் சார்ந்த சேவை­கள், மின்­னணு வர்த்­த­கம், மின்­னணு சாத­னங்­கள் தயா­ரிப்பு, மின்­னணு பணப் பரி­வர்த்­த­னை­கள், கணி­னி­யில் நாச வேலை­களை தடுக்­கும் சைபர் பாது­காப்பு துறை ஆகி­ய­வற்­றில், பல்­லா­யி­ரம் கோடி டாலர் வர்த்­தக வாய்ப்­பு­கள் உள்ளன.அத­னால், அடுத்த ஏழு ஆண்­டு­களில், இந்­தி­யா­வின் மின்­னணு பொரு­ளா­தா­ரம், 1 லட்­சம் கோடி டால­ராக உய­ரும். அது, ஒரு பெரிய இலக்கே அல்ல. ஆனால், எதற்­காக அவ்­வ­ளவு காலம் காத்­தி­ருக்க வேண்­டும் என்­பது தான், என் கேள்வி. ஏன், அந்த இலக்கை, 3 – 4 ஆண்­டு­க­ளுக்­குள் எட்ட முடி­யாதா? அதற்கு, தக­வல் தொழிற்­நுட்ப நிறு­வ­னங்­கள் உதவ வேண்­டும்.இந்­திய தக­வல் தொழிற்­நுட்­பத் துறை­யின் வரு­வாய், 10 லட்­சம் கோடி ரூபாயை தாண்­டி­விட்­டது; ஏற்­று­மதி, 7.50 லட்­சம் கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது.இத்­த­கைய சூழ­லில், உள்­நாட்டு மின்­னணு துறையை மேம்­ப­டுத்த வேண்­டி­யது அவ­சி­ய­மா­கும். அனை­வ­ரும் பயன்­ப­டுத்­தும் தொழிற்­நுட்­பத்தை உரு­வாக்­குங்­கள். வளர்ச்­சிக்­கான அடிப்­படை கட்­ட­மைப்பை ஏற்­ப­டுத்­துங்­கள். அனைத்­தி­லும் மின்­னணு செயல்­பா­டு­களை பிணைக்­கும் சூழலை அமை­யுங்­கள் என, தக­வல் தொழிற்­நுட்­பத் துறை­யி­னரை கேட்­டுக் கொள்­கி­றேன்.மேலும், கணி­னி­யில் நடை­பெ­றும் பல்­வேறு குற்­றங்­களை கண்­டு­பி­டிக்­க­வும், தடுக்­க­வும் உத­வும், ‘சைபர்’ பாது­காப்பு துறை­யின் வளர்ச்­சிக்­கும் பங்­க­ளிப்பை வழங்க வேண்­டும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement