X
Advertisement

ஜியோ டிடிஎச் 6 மாத இலவச சேவையா?

புதுடில்லி : ஜியோ 4ஜி சேவைகளை தொடர்ந்து டிடிஎச் சேவைக்கான தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அந்த வகையில் ஜியோ டிடிஎச்-இல் 6 மாதங்களுக்கு இலவச சேவை பெற முன்பதிவு செய்யக் கோரும் லிங்க் வேகமாக பரவி வருகிறது.

இதில் இடம்பெற்றுள்ள இணைய முகவரியில் ஜியோ பிரைம் டிடிஎச் சேவை மூலம் முதல் ஆறு மாதங்களுக்கு இலவசமாக பெறுங்கள் என்ற தகவல் இடம்பெற்றுள்ளது. ஜியோ டிடிஎச் அறிமுக சலுகையின் கீழ் ஜியோ டிடிஎச் செட்-டாப் பாக்ஸ் சேவையை முதல் ஆறு மாதங்களுக்கு பயன்படுத்த முடியும். இத்துடன் 432 டிவி சேனல்களும், 350க்கும் அதிகமான சாதாரண சேனல்களும், 50க்கும் அதிகமான எச்டி சேனல்களும் பெற முடியும். மேலும் ஏற்கனவே 1.7 மில்லியனுக்கும் அதிகமானோர் ஏற்கனவே பதிவு செய்துள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement