X
Advertisement

இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 64.64

மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (ஏப்ரல் 21, காலை 9 மணி நிலவரம்)ரூபாயின் மதிப்பு 8 காசுகள் சரிந்து 64.64 ஆக உள்ளது. முன்னதாக நேற்றைய வர்த்தக நேர இறுதியில் ரூபாய் மதிப்பு 64.56 ஆக இருந்தது.
பிரான்சில் முதல்சுற்று தேர்தல் நடக்க உள்ளநிலையில் அங்கு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளதால் ஏற்றப்பட்டுள்ள பதற்றம் மற்றும் அமெரிக்கா வெளியிட்டுள்ள உள்நாட்டில் வேலையில்லாதவர்கள் பற்றிய புள்ளிவிபரம் ஆகியன அந்நிய செலாவணி சந்தையில் அனைத்து நாடுகளின் நாணய மதிப்பையும் சரிவடைய செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement