Advertisement

இணைப்பு – கையகப்படுத்தல் நடவடிக்கை; 1,790 கோடி டாலர் ஒப்பந்தம் கையெழுத்து

புதுடில்லி : மெர்­ஜர்­மார்க்­கெட் நிறு­வ­னம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை: கடந்த ஜன.,– மார்ச் வரை­யி­லான காலாண்­டில், 1,790 கோடி டாலர் மதிப்­பிற்கு, நிறு­வ­னங்­கள் இடையே, இணைப்பு மற்­றும் கைய­கப்­ப­டுத்­தும் திட்­டங்­கள் கையெ­ழுத்­தாகி உள்ளன. இது, கடந்த ஆண்டு இதே காலத்­தில் மேற்­கொள்­ளப்­பட்ட, 920 கோடி டாலர் அள­வி­லான, ஒப்­பந்த மதிப்பை விட, இரு மடங்கு அதி­கம் ஆகும். அதே சம­யம், இதே காலத்­தில், நிறு­வ­னங்­கள் மேற்­கொண்ட ஒப்­பந்­தங்­களின் எண்­ணிக்கை, 110லிருந்து, 76 ஆக குறைந்­துள்­ளது.
ஜப்­பான் தவிர்த்த, ஆசிய பசி­பிக் பிராந்­தி­யத்­தில், நிறு­வ­னங்­களின் இணைப்பு மற்­றும் கைய­கப்­ப­டுத்­து­தல்நட­வ­டிக்­கை­களில், மதிப்­பின் அடிப்­ப­டை­யில், இந்­தி­யா­வின் பங்கு, 2013 முதல், வேக­மாக வளர்ச்சி கண்டுவரு­கிறது. மதிப்­பீட்டு காலாண்­டில்,இவ்­வ­ளர்ச்சி, 13.2 சத­வீ­த­மாக உயர்ந்து உள்ளது. நடப்­பாண்­டின், முதல் காலாண்­டில், தொலை தொடர்பு துறை­யில், 1,360 கோடி டாலர் மதிப்­பி­லான மூன்று ஒப்­பந்­தங்­கள் கையெ­ழுத்­தா­யின. இதில், வோட­போன் – ஐடியா செல்­லு­லார் இணைப்பு ஒப்­பந்­தம், 1,270 கோடி டாலர் மதிப்­புள்­ளது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. கடந்த ஆண்டு இதே காலத்­தில், 6 கோடி டாலர் மதிப்­பில், இரு ஒப்­பந்­தங்­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement