Advertisement

சகாராவின் ரூ.7,400 கோடி சொத்துகளை ஏலம் எடுக்க போட்டா போட்டி

புதுடில்லி : நாட்­டில், பல்­வேறு இடங்­களில் உள்ள, சகாரா குழு­மத்­தின், 7,400 கோடி ரூபாய் மதிப்­புள்ள சொத்­து­களை வாங்க, டாடா, அப்­பல்லோ, அதானி, பதஞ்­சலி உட்­பட, பல நிறு­வ­னங்­கள் போட்டி போடு­வ­தாக தக­வல் வெளி­யாகி உள்­ளது.
முறை­கே­டாக நிதி திரட்­டிய வழக்­கில், சகாரா குழு­மம், அதன் சொத்­து­களை விற்று, வரும் ஆகஸ்ட் மாதத்­திற்­குள், பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு வாரி­யத்­தி­டம், 10,500 கோடி ரூபாய், ‘டிபா­சிட்’ செய்ய வேண்­டும் என, சுப்­ரீம் கோர்ட் உத்­த­ர­விட்டு உள்­ளது. இதை­ய­டுத்து, டில்லி, புனே, லக்னோ, கோவை உள்­ளிட்ட நக­ரங்­களில், சகா­ரா­வுக்­குச் சொந்­த­மான, 30 அசையா சொத்­து­கள் ஏலம் விடப்­பட உள்ளன. இதில் பங்கு கொள்ள, முன்­னணி நிறு­வ­னங்­கள் விண்­ணப்­பித்து உள்ளன. இது குறித்து, ஏல விற்­பனை மேற்­கொள்­ளும், நைட் பிராங்க் இந்­தியா நிறு­வ­னம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை:
சகாரா குழு­மத்­தின் சொத்து விற்­பனை குறித்து வெளி­யிட்ட விளம்­ப­ரத்­திற்கு, நல்ல வர­வேற்பு கிடைத்­துள்­ளது. ஓமக்ஸ், எல்­டெகா உள்­ளிட்ட, பல ரியல் எஸ்­டேட் நிறு­வ­னங்­களும், வெளி­நா­டு­களில் உள்­ள­வர்­களும், ஏலத்­தில் பங்­கேற்க விருப்­பம் தெரி­வித்து உள்­ள­னர். பொதுத் துறை­யைச் சேர்ந்த, இந்­தி­யன் ஆயில் கார்ப்­ப­ரே­ஷன் நிறு­வ­ன­மும் விண்­ணப்­பித்­துள்­ளது. லக்­னோ­வில் உள்ள சகாரா மருத்­து­வ­ ம­னையை வாங்க, சென்­னை­யைச் சேர்ந்த அப்­பல்லோ மருத்­து­வ­மனை விண்­ணப்­பம் செய்­துள்­ளது. மொத்­தம், 59 நிறு­வ­னங்­க­ளி­டம் இருந்து, 163 விண்­ணப்­பங்­கள் வந்­துள்ளன. அவை, விரை­வில் பரி­சீ­லிக்­கப்­பட்டு, ஏலத்­தில் பங்­கேற்க தகு­தி­யான நிறு­வ­னங்­கள் தேர்வு செய்­யப்­படும்.இவ்­வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சகாரா குழு­மத்­தின் சொத்­து­களை வாங்க, டாடா, அதானி, பதஞ்­சலி குழு­மங்­களும் விருப்­பம் தெரி­வித்­து உள்­ள­தாக கூறப்­ப­டு­கிறது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement