Advertisement

ரூ.1.24 லட்சம் கோடி பிரீமியம் எல்.ஐ.சி., நிறுவனம் வசூல்

மும்பை : எல்.ஐ.சி., எனப்­படும், லைப் இன்­சூ­ரன்ஸ் கார்ப்­ப­ரே­ஷன், கடந்த நிதி­யாண்­டில், 1.24 லட்­சம் கோடி ரூபாயை, முதல் ஆண்டு பிரீ­மி­ய­மாக வசூ­லித்­துள்­ளது. இது, முந்­தைய ஆண்­டில், 97 ஆயி­ரத்து, 777 கோடி ரூபா­யாக குறைந்­தி­ருந்­தது.
இதை­ய­டுத்து, உள்­நாட்­டில், ஆயுள் காப்­பீட்டு வணி­கத்­தில், முதல் ஆண்டு பிரீ­மீய வசூ­லில், எல்.ஐ.சி.,யின் பங்கு, 76.09 சத­வீ­த­மாக உள்­ளது. இது, முந்­தைய ஆண்­டில், 70.61சத­வீ­த­மாக இருந்­தது. இதே காலத்­தில், குழு மற்­றும் ஓய்­வூ­திய காப்­பீட்டு திட்­டங்­கள் மூலம் வசூ­லித்த பிரீ­மிய தொகை, 78 ஆயி­ரத்து, 805 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது.
எல்.ஐ.சி., நிறு­வ­னம், கடந்த ஆண்­டில், 2.01 கோடி, புதிய காப்­பீட்டு திட்­டங்­களை விற்­பனை செய்து உள்­ளது. இது, முந்­தைய ஆண்­டில், 2.05 கோடி காப்­பீட்டு திட்­டங்­க­ளாக அதி­க­ரித்து இருந்­தது. இந்­நி­று­வ­னத்­தின் மொத்த காப்­பீட்டு திட்­டங்­களில், ஜீவன் அக் ஷய் என்ற ஓய்­வூ­திய திட்­டத்­தின் பங்கு மட்­டும், 60 சத­வீ­தம் என்­ற­ள­வில் உள்­ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement