Advertisement

தென் கிழக்கு ஆசிய சந்தையில் கால் பதிக்கிறது டாடா ஸ்டீல்

மும்பை : டாடா குழு­மத்­தைச் சேர்ந்த, டாடா ஸ்டீல் நிறு­வ­னம், உருக்கு பொருட்­கள் உற்­பத்தி மற்­றும் விற்­ப­னை­யில் ஈடு­பட்டு வரு­கிறது. இந்­நி­று­வ­னம், இந்­தாண்­டில் அதி­க­ள­வில் ஏற்­று­ம­தியை மேற்­கொள்­ளும் நோக்­கில், தென் கிழக்கு ஆசிய சந்­தை­யில், கால் பதிக்க திட்­ட­மிட்டு உள்­ளது.
இது குறித்து, இந்­நி­று­வ­னத்­தின் தலைமை நிர்­வாக அதி­காரி, டி.வி.நரேந்­தி­ரன் கூறி­ய­தா­வது: தென் கிழக்கு ஆசிய சந்தை, மிகப்­பெ­ரிய வளர்ச்சி அடைந்து வரு­வ­தால், அங்கு, நிறு­வ­னத்­தின் தயா­ரிப்­பு­களை விற்­பனை செய்ய ஆராய்ந்து வரு­கி­றோம். மேலும், நடப்பு ஆண்­டில், ஏற்­று­ம­தியை அதி­க­ரிக்­க­வும், நிறு­வ­னம் பல நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கிறது. இந்­திய உருக்கு துறை­யின் வளர்ச்சி, உல­க­ள­வில், உருக்கு ஆலை­க­ளுக்­கான இயந்­தி­ரங்­களை தயா­ரிக்­கும் நிறு­வ­னங்­க­ளுக்கு, சிறந்த முத­லீட்டு வாய்ப்­பாக அமை­யும். இது, இந்­தி­யா­வில் அதிகமுத­லீட்டை ஈர்க்­கும். இவ்­வாறு அவர் கூறி­னார். டாடா ஸ்டீல் நிறு­வ­னம், 2013 – 14ம் ஆண்­டின், ஒருங்­கி­ணைந்த சிறந்த உருக்கு ஆலைக்­கான, பிர­த­ம­ரின் விருதை வென்­றுள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement