Advertisement

யெஸ் பேங்க் நிறுவனம்; லாபம் ரூ.914 கோடி

புதுடில்லி : தனி­யார் துறை­யைச் சேர்ந்த யெஸ் பேங்க், வங்கி சேவை­யில் ஈடு­பட்டு வரு­கிறது. இந்த வங்கி, கடந்த மார்ச் மாதத்­து­டன் முடி­வ­டைந்த காலாண்­டில், 914.12 கோடி ரூபாயை தனிப்­பட்ட நிகர லாப­மாக ஈட்­டி­யுள்­ளது.
இது, முந்­தைய ஆண்­டின், இதே காலாண்­டில், 702.11 கோடி ரூபா­யாக குறைந்­தி­ருந்­தது. இதே காலத்­தில், இந்த வங்­கி­யின் மொத்த வரு­வாய், 29.4 சத­வீ­தம் உயர்ந்து, 4,331.11 கோடி ரூபா­யில் இருந்து, 5,606.38 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது. கடந்த மார்ச் மாத நில­வ­ரப்­படி, யெஸ் பேங்க் வங்­கி­யின் நிகர வாராக்­க­டன், 1.52 சத­வீ­த­மாக அதி­க­ரித்­துள்­ளது. இது, முந்­தைய ஆண்­டில், 0.76 சத­வீ­த­மாக குறைந்­தி­ருந்­தது. அண்­மை­யில், கடன் பத்­தி­ரங்­களை வெளி­யிட்டு, 20 ஆயி­ரம் கோடி ரூபாய்க்கு நிதி திரட்டி கொள்ள, வங்­கி­யின் இயக்­கு­னர்­கள் குழு ஒப்­பு­தல் அளித்­துள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement